பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. நோயும் மருந்தும் 'காமம்’ ‘காதல்’ என்னும் சொற்களுக்குப் பழங்காலத்தில் ஒரே பொருள் இருந்து வந்தது. இன்று காமம் வேறு காதல் வேறு என்றாகிவிட்டது. காமம் தன்னல மானது. உடம்பே காரணமாக எழும் ஆசை. காதல் தன்னலம் அற்றது. உள்ளம் காரணமாக வரும் அன்பு, உலகில் நன்மை தீமைகளைப் பிரிக்க முடியாதது போல் காமத்தையும் காதலையும் பிரிப்பது அருமையான தாகும். நன்மையான செயலில் சிறு தீமையும் கலந்துள்ளது. தீமையான செயலில் சிறு நன்மையும் கலந்துள்ளது. ஒருவர் வாழ்க்கையைத் தொடங்கும் நிலையில் காமுகர். காதலர் என்று பிரித்தறிவது இயலாது. தொடக்கத்தில் ஒரே தன்மைதான் காணப்படும். வளர்ச்சியிலேயே வேறுபாடு தென்படும். ஆண் பெண் உறவு என்பது தொடக்கத்தில் ஒரு செடியாய் முளைத்து எழுவது. அப்போதே அதனிடத்து இருகிளைகள் தோன்றத் தொடங்கும். ஒருகிளை காமம் உடல் பற்றிய கவர்ச்சி. மற்றொன்று காதல் உள்ளம்பற்றிய கவர்ச்சி. இந்த இருசுவடுகளும் எல்லோருடைய வாழ்க்கையிலும் உண்டு. வளரும் நிலையில் இந்த இருகிளைகளுள் ஒன்று மட்டும் செழித்து ஒங்கும்போது மற்றொன்று வளர்ச்சி இன்றி மெலிந்து நின்று பட்டு போகும். நல்ல பண்புகள் நிறைந்த