பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 இனிய இன்பம் எது? தாமரைக் கண்ணான் உலகு எனக் கூறப்பெறும் அந்த உலகில் பெறும் இன்பம் அளவிறந்து ஒப்பற்றதாக இருக்கும் டான்மையது. இங்குத் திவ்வியக் கற்பகச்சோலைகள், நானாவிதமலர்கள் நிறைந்த திவ்விடி பூங்காக்கள். தில்லிய இள மரக்காக்கள். திவ்விய செய்குன்றங்கள் நீராடும் திவ்விய தடாகங்கள் முதலியவை நிறைந்து இருக்கும். இங்கு மிகவும் இடமகன்ற நிரதிசய ஆனந்த மயமான திருமாமணி மண்டபம் ஒன்று உண்டு. உபய விபூதியிலுள்ளவர்களும் ஒரு மூலையில் அடங்கும்படியாக மிக விசாலமானது. இங்குள்ள பொருள்கள் யாவும் சுத்த சத்துவத்தாலானவை. இங்குக் காலம் நடையாடாது காலை மாலை, பகல் இரவு இன்று நேற்று என்ற நிலைகள் இங்கு இல்லை. முன்-யின் என்ற நிலைதான் உண்டு. வீடுபேறு அடைதற்கேற்ற உபாயங்களைக் கையாண்டு அவன் திருவருளைப் பெற்ற முமுட்சுகள்தாம் இந்த நீள் விசும்பினை அடைதல் முடியும். இவர்கள் இப்பூவுலகிற்குத் திரும்பி வருதல் இல்லை. பிரளய காலத்தில் இவர்கட்கு அழிவு இல்லை. இறைவன் திருவுள்ளப்படி எந்த உருவத்தையும் இவர்கள் மேற்கொள்வர். வள்ளுவர் பெருமான் இந்தக் கற்பனையுலகில் பெறும் கற்பனை இன்பம் உண்மையுலகில் ஒரு மங்கை யினால் பெறும் இன்பத்தைவிட இனிமையுடைய தாகமாட்டாது என்று கூறி நம்மைச் சிந்திக்க வைக்கின்றார். 2. சுத்த சத்துவம் - இதனாலான பொருள்கள் ஆதல், அழிதல், தேய்மானம் அற்றவை. 3. முமுட்சுகள் மோட்சத்தில் விருப்பமுள்ளவர்கள்.