பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. எது இனியது - சிற்றின்பமா? பேரின்பமா? ஓர் இளைஞன் ஓர் இளமங்கையை மருவுதலாகிய இன்பத்தைச் சிற்றின்பம் என்று வழங்குதல் மரபு. முக்தியுலகில் இறைவனுடன் கலத்தலால் பெறக் கூடிய இன்பம். பேரின்பம் முன்னது அதியசய இன்பம் என்றும் பின்னது நிரதிசய இன்பம் என்றும் உரைப்பர் பரிமேலழகர். இந்த இரண்டில் எது இனியது என்பதை வள்ளுவரே கூறுவார், தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு (1103) என்ற குறட்பாவில் இது தலைவன் தன் பாங்கற்கு உரைப்பதாக அமைந்தது. இடந்தலைப்பாட்டின் இறுதிக்கண் சொல்லியது. அதாவது பாங்கற் கூட்டத்தின் தொடக்கத்தில் கூறியதாகும்: தலைவனை நோக்கி "பேரின்பத் திற்குரிய நீ இச்சிற்றின்பத்தை விரும்புவது தகாது" என்று சொல்லியவனுக்கு மறுமொழியாக அமைந்தது. சிற்றின்பம் சிறிதும் வருந்தாமல் ஐம்புலன்களால் நுகரும் இன்பம் இவ்வுலகில் பெறுவது பேரின்பம் கற்பனை யுலகில் அடைவது. அந்த இன்பத்தை அடைந்தவர் யார் இெஇெல்.: 1. தமிழர் வாழ்க்கையை அகத்தினை, புறத்திணை என்று இரு கூறிட்டுப் பேசுவர். அகத்தினை களவு, கற்பு என்று மேலும் இரண்டு வகையாகப் பேசப் பெறும். கனவியல் ஊழ் கட்டுப்பாட்டில் அடங்கியது. களவியல், இயற்கைப்புணர்ச்சி, இடத்தலைப் பாடு , பாங்கற் கூட்டம், தோழியற் கூட்டம் என்று மேலும் விரியும். இயற்கைப் புணர்ச்சி ஊழ் கூட்டு வித்தலால் தலைவனும் தலைவியும் சேர்தல். இடத்தலைப்பாடு முன்னர்கூடிய இடத்திலேயே மறுநாளும்கூடுதல்;தலைப்படுதல் கூடுதல். அடுத்து நிகழ்வது பாங்கன் உதவியனால் கூடும் கூட்டம். தொடர்ந்து பாங்கியர்க்கூட்டங்கள் நடந்தவண்ணம் இருக்கும்