பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ஊடலும் - கூடலும் நாம் காதல் மிகுந்தவர்களாக உள்ளோம் என்கின்றான். நீ பல மகளிரைக் காதலிக்கின்றாயோ? அவருள் அன்பு மிகுதியோ? என்னைப் போன்ற காதலியா பல உளரோ? அதனால் யாரையும் விடக் காதல் மிகுதி என்றாயோ? அவர்கள் யார்? யாரைவிட? யாரைவிட" என்று கேட்டு ஊடுகின்றாள். யாரினும் காதலம் என்றேனா? ஊடினாள் யாரினும் யாரினும் என்று (1314) என்பது வள்ளுவர் வாக்கு. இந்தப் பிறப்பில் தாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியோம் என்கின்றான் காதலன். அப்படியா?. இந்த ஒரு பிறப்புதானா? மறுபிறப்பில் பிரியக் கருதிவிட்டாயா? என்று ஊடிக் கொண்டே கண்ணிர் கலங்குகின்றாள். இம்மைப் பிறப்பில் பிரியலம் எனறேனாக் கண்ணிறை நீர்கொண் டனள் (43.15) என்பது பொய்யாமொழி. 'பிரிந்து சென்றபோது நின்னை அடிக்கடி நினைத் தேன் என்கின்றான் காதலன். பிரிந்தவுடன் என்னை மறந்து விட்டாயோ? என்று சொல்லி ஊடுகின்றாள் காதலி. உள்ளினேன் என்றேன்மற்றுளன்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனன் (1318) என்பது வள்ளுவர் வாய்மொழி ஊடல் நீடிக்கின்றது. காதலனுக்குத் தும்மல் வரு கின்றது. தும்முகின்றான். வழக்கம்போல் காதலி நூறாண்டு வாழ்க என்று தும்மல் கேட்டு வாழ்த்துகின்றாள். ஆனால் வ. வா. சி - 15