பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi வாழ்வுபற்றிய சிந்தனைகள் வள்ளுவர் பெருமான் கருத்தின் அடிப்படையில் சிறு சிறு கட்டுரைகளாக உருவம் பெற்றன. சில சமயம் தனிக்குறட்பாவும் சிந்தனையில் இடம் பெற்று விளக்கம் அடையும். அவையும் சில விளக்கக் கட்டுரைப் போல் இடம் பெற்றன. இவ்வாறு கிடந்த முப்பத்தாறு சிறுசிறு கருத்துக்கோவைகளை ஒருநாள் எடுத்துத் தொகுத்து நோக்கினபொழுது அவை நூல் வடிவம் பெற்று நாட்டில் உலவினால் பலருக்குப் பயன்படக் கூடும் என்று எண்ணிய எண்ணமே இந்த நூல் வெளிவரக் காரணமாயிற்று. பல அரிய நூல்களைப் பதிப்பித்து வேகமாக முன்னேறி வரும் திருமதி R. தேவகி அவர்களை உரிமை யாளராகக் கொண்ட அவ்வை பதிப்பகம் இந்த நூலின் படியை அன்புடன் ஏற்று பதிப்பித்து தமிழ்கூறு நல்லுலகில் நடையாட விட்டமைக்கு என் இதயங்கலந்த நன்றி என்றும் உரியது. இந்த அரிய நூலுக்கு அரியதோர் அணிந்துரை வழங்கியவர் பேராசிரியர் பாஸ் கன் (வயது 70) (பிறப்பு 1.3-1984) பெளதிகம் பி.எஸ்.சி., பி.எஸ்.சி , எம்.எஸ்.சி., எம். ஃ.பில்., மற்றும் பி.டி., எம்.எட்., ஆகிய பட்டங்களைப் பெற்று கலைக் கல்லூரி கல்வியியல் கல்லூரி, பொறியியல், மருத்துவ, கால்நடைக் கல்லூரிகளில் பேராசிரியராக, முதல்வராக, பதவி உயர்வு; இறுதியாக கல்லூரிக்கல்வி இணை இயக்குநராகப் பணியாற்றி அகவை முதிர்வினால் பணியிலிருந்து விலகினார்(1992). பின்பு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் பல்வேறு நிலைகளில் இருக்குறள் கருத்துகளைப் பரப்புவதில் தம் வாழ்க்கைப்