பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2●誌 ஊடலும் - கூடலும் உணவு உட்கொள்வதைவிட முன் உண்ட உணவு செரிமானம் ஆதல் இன்பம் தரும். அதுபோல காதல் வாழ்வில் மேலும் புணர்தலை விட முன்னைத் தவறுபற்றி விடுதல் இன்பம் தரும். உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது (1323) என்பது வள்ளுவர் வாக்கு. இன்ப வாழ்வில் ஊடுதல் இன்பம் தரும் அதன்ை விட அதனை அறிந்து நீங்கி மீண்டும் புணர்தல் இன்பம் தரும் ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் (1330) என்பது வள்ளுவம் அகர முதல என்று தமிழ் முதல் உயிர் எழுத்தாகிய அ வில் தொடங்கி பெறின் என்பதில் உள்ள தமிழின் இறுதி மெய் எழுத்தாகிய 'ன் இல் முடிவது ஒருவகை இன்பம்: பேரின்பம். தமிழில் எந்த நூலும் இங்ங்ணம் முடிந்ததில்லை.