பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. மாலை அலரும் நோய் காதல் உணர்வு என்பது இனப்பெருக்கத்திற்காக இறைவனால் வழங்கப்பெற்ற ஓர் அற்புத ஆற்றல். அஃது ஒவ்வோர் உயிரும் கருவில் உதயமாகும் போதே இறைவனால் வழங்கப் பெற்றதாகும். உயிர்களின் உடல் இரட்டை Epá&mdasmid (Double Chromosomes) seb6Tgl Gréti g அறிவியல் உண்மை. உயிரணுக்கள் உடலாக உருப்பெறும் பொழுதே இந்த உடல் இரட்டை நிறக்கோல்களால் உருப்பெறு கின்றது. அப்பொழுதே அடுத்த உயிர் உற்பத்தியாவதற்கும் வழிவகுக்கப் பெறுகின்றது. ஆண் உயிராகும் விரைகளிலும் பெண் உயிராகும் சூற்பைகளிலும் ஒற்றை நிறக்கோல்கள் அமைக்கப்பெறுகின்றன. இவை ஆண் முன் - குமரப்பருவம் வரையிலும் பெண் பூப்பெய்தும் வரையிலும் 'ஆலம் விதத்தின் அருங்குறள்போல் அடங்கி அறிதுயில் கொண். நிலையில் உள்ளன. அப்பருவம் எய்திய பிறகு இவை நீண்ட உறக்கத்திலிருந்து எழுகின்றன. இவை ஒன்றையொன்று சேர்ந்து இரட்டை நிறக்கோல்களாலான உடலாக உருப்பெறத் துடிக்கின்றன. இத் துடிப்பே காதல் என்ற உணர்வாகும். இந்த உணர்வை வள்ளுவர் பெருமான் நோய் என்கின்றார். தத்துவ நோக்கில் பிறவியே நோய் தானே. அஃதாவது பிறவிநோய் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நோக்குவதை நோய் நோக்கு குறள் 10.91 என்று உருவகப் படுத்திக் காட்டியவர் அதே குறளில் அந்நோக்கு மருந்தாக மாறுவதையும் சித்திரிககின்றார் அல்லவா?