பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 மாலை அலரும் நோய் 3. இந்த நோய் இப்பருவ உயிர்களை உறங்காமல் கலுழ்கின்ற நிலைக்குத் தள்ளுகின்றது. இடையே ដ៏វិស្ណ ខ្មុំ உறக்கம் பெற்றாலும் அது கனவு நிலையாக மாறு கின்றது. கனவில் காதலனோ காதலியோ வருகின்றனர். கனவு கலை கின்றது. இவ்வாறு இராக் காலம் ஒருவன்று கழிந்தபிறகு பொழுது புலர்கின்றது. காலையில் காதலரைப் பிரிந்த பிரிவுத்துன்பம் தலையெடுக்கின்றது. அரும்புகின்றது. பகல் முழுவதும் மெல்ல வளர்கின்றது. அரும்பு போது ஆகின்றது. மலை வந்த உடனே துன்பம் பழையபடி முற்றி முழு நிலை அடைந்து மீண்டும் வருத்துகின்றது. மலராகின்றது. இந்த நிலைமை தன் உள்ளத்தில் மாறி மாறி நேர்கின்றது. இதனைப் பெண் எண்ணிப் பார்ப்பதாக வள்ளுவர் பெருமான் சித்திரிக்கின்றார். காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை அலரும்இந் நோய் (1.227) என்ற குறட்பாவில் தன்நெஞ்சு தன் காதலர் பின் சென்று அலைவதையும் உணர்கின்றாள். இந்தக் காதல் உணர்வுக்கு வடிவந் தந்து எண்ணற்ற இலக்கியங்கள் எழுந்துள்ளன. தமிழ் இலக்கியக் கருவூலத்தில் அக இலக்கியம் பெரும் பகுதியாகும். இந்த உணர்வு பக்தி இலக்கியங்களிலும் நாயக நாயகி பாவனையாக இடம் பிடித்துக் கொண்டுள்ளது. இந்நிலைகள் சக்தி இலக்கியத்தில் இடம் பெற்றி ருப்பதைக் காண்போம். திருமங்கையாழ்வார் திருக்கண்ண மங்கைப் பதிகம் ஒன்றில் பெரி. திரு. 8.5. இந்நிலையைச் சித்திரித்துக் காட்டுகின்றார். தலைவனைப் பிரிந்த தலைவி மாலைப் பொழுது கண்டு இரங்குதல் என்ற குறிப்புடன் காணப்