பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 204 பெறுகின்றது தந்தைகாலில் விலங்கு அற என்று தொடங் கும் இத்திருமொழி. இதில் ஒரு பாசுரம்: மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன் வளர்புரை திருமார்வில் தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது; ஒர்துணைகானேன்; ஊரும் துஞ்சிற்று; உலகமும் துயின்றது; ஒளியவன் விசும்பியங்கும் தேரும் போயிற்று, திசைகளும் மறைந்தன;செய்வதொன்று அறியேனே (2) மாரி - மேகம் வளைவணன் சங்கு போன்ற வெண்ணிறமு.ையபலராமன் தாழ்ந்தது . தாமதித்தது - விசும்பு ஆகாயம் ஒளியவன் சூரியன் மறைந்தன தெரியவில்லை திருமங்கையாழ்வார் - பரகாலர் நாயகி நிலையி யிலிருந்து பரகாலநாயகி பேசுகின்றார். 'எம்பெருமான் திருமார்பில் அணிந்துள்ள மாலையின் மீதுள்ள ஆசையாவே என் நெஞ்சு என்னை விட்டு அங்குச் சென்றது. அதனைப் பெற்றுத் திரும்பி வருதலையும் செய்யவில்லை. அதனைப் பெறுவது அரிது என்று ஆசையை விட்டொழித்து விட்டுத் பி வந்து விடலாம். அதையும் செய்யவில்லை. 莎、 இதுவரையில் எனக்குத் துணையாக இருந்து வந்த எல் γή நெஞ்சும் அகன்று விட்டது. உற்ற துணைவனான எம். பருமாலும் என்னை அலட்சியம் செய்து விட்டான். இப்போது எனக்குத் துணையாவார் ஒருவரும் இலர் உண்டியே உடை யே உவந்தோடும் உலகினருக்கும், உண்ணும் சோறு பருகும் $r;