பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 மாலை அலரும் நோய் நீர் தின்னும் வெற்றிலையும் கண்ணன் என்று இருக்கின்ற எனக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை. என்றாலும் யாருடனாவது எதையாவது பேசிக் கொண்டு பொழுதைப் போக்கித் தொலைப்போம் என்று பார்த்தாலும் ஊராரும் உலகத்தாரும் தாங்கள் விரும்பிய இன்பங்களைக் குறைவாப் பெற்றுக் களித்துக் குறட்டை விட்டு உறங்குகின்றனர். உலகப் பொருள்களில் எதையேனும் கண்டு கொண்டாகிலும் இந்தப் பிரிவாற்றாமையை ஒருவாறு ஆற்றுவோம்' என்று நினைத்தாலும் பகலோன் தேரோடும் போய் மறைந்தான் இருள் கெளவிக் கொணடு விட்டதனால் ஒரு பொருளும் கண்ணுக்கு. புலனாவதில்லை. வெளியுலகிலும் ஒருவரும் இவர் நெஞ்சும் குடிபோயிற்று நாயகனும் வந்து அணை கின்றிலன், காலமோ துயர் நெருடும்படியான இராக்காலமாக உள்ளது. என்ன செய்து தரிக்கலாம் என்று தெரியவில்லையே என்கின்றாள் பரகலை நாயகி. இப்பாசுரத்தின் ஈற்றடியில் ஒரு வரலாறு ஐதிகம உரையில் காணப்பெறுகின்றது. அதனையும் உணர்ந்து தெளிந்தால் வள்ளுவர் பெருமானின் ஆழ்ந்த கருத்து தம் உள்ளுணர்வுக்குத் தட்டுப்படும். அதனையும் காட்டுவேன். பிள்ளையுறங்காவில்லிதாசர் உறையூர் அரசனுக்கு உடம்பு பிடிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த மல்லன்: பூர்வாசிரமத்தில், அவன் துணைவி பொன்னாச்சி பேரழகு மிக்கவள். இவர்கள் இருவரும் ஒருநாள் சித்திரைத் திரு விழாவைக் கண்டு களிக்கத் திருவரங்கத்திற்கு வருகின்றனர். வில்லி தன் மனைவிக்குக் கால்கடும் என்று இம்பளத்தை 1. பாசுரப்பொருளை நன்கு மனத்தில் அமைத்துத் தெளித்தபின் வன்ஜன் பெருமானின் வாக்கைச் சிந்தித்து உணர்தல்கேண்டும்.