பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 206 விரித்து அதன் மீது நடக்கச் செய்து கொண்டும் சூரிய வெப்பம் டலில் படும் என்று குடை பிடித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தான்.இராமாநுசருடன் சீடர்கள் காவிரியில் நீராடியபின் திருமடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் இக்காட்சியைக் கண்டு கை கொட்டி நகைத்தனர். இராமாநுசரும் இக்காட்சியைக் கண்டனர். இக்காட்சியிலேயே நயனதீக்கை உறங்கா வில்லிக்கு நடைபெற்று விடுகின்றது. இராமாநுசர் கை அசைவினால் சைகை காட்டித் தம் அருகில் வருமாறு பணிக்க, வில்லியும் வந்து அவரை வணங்கினான். இராமாநுசர் பலர் நடமாடும் தெருவில் இவ்வாறு செய்து வருவது விரும்பத்தக்கதன்று என்று அறிவுரை கூறினார். அதற்கு வில்லி மறுமொழியாக "இத்தகைய பேரழகு மிக்க மங்கை சுடும் வெயிலில் வாடுவது சரியா? எனவேதான். தான் இவ்வாறு செய்வதாகச் சொன்னான். உடையவர் இருவரையும் மடத்திற்கு வருமாறு பணித்துச் சென்றார். மறுநாள் வில்லியும் பொன்னாச்சியும் திருமடத் திற்குப் போந்தனர். இராமாநுசர் வினவுகின்றார் இப்பெரு மாட்டியைவிட அழகுடைய பொருளைக் கண்டால் நின் விருப்பம் மாறுமா என்று கட்டாயம் மாறும் என்று மறுமொழி வருகின்றது. இராமாநுசர் இருவரையும் அரங்கன் சந்நிதிக்கு இட்டுச் செல்கின்றார். அரங்கன் திருவடி திருவரை திருமார்பு திருக்கழுத்து, திருக்கண்கள், திருமுகம், திருவயிடேகம் வரையிலும் உற்று நோக்கி அநுபவிக்குமாறு திருப்பாணாழ்வார் அநுபவித்தது போல பணிக்கின்றார் இருவரும் அங்ங்னமே அநுபவித்து மகிழ்கின்றனர். மூவரும் திருமடத்திற்குத் 2. அமலனாதிபிரான் - காண்க.