பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 210 அறிஞர்களுக்கு சொல்லொணாத் துயரத்தை விளைவித்து வருகின்றது. வல்லந்தமாக இளம் மகளிரைக் கற்பழித்தல், குழுவாகச் சென்று ஒரு பெண்ணைக் கற்பழித்தல், சில சமயம் வயதிற்கு வராத பெண்ணைக் கற்பழித்தல் போன்ற செய்திகள் அன்றாடச்செய்தித்தாள்களில் காணப்படு கின்றன. தந்தை சில சமயம் மகளையே கற்பழித்த செய்தியும் வருகின்றது. இவர்களை வள்ளுவர் பெருமானாலும் திருத்த முடியவில்லை. அப்பெருமான் ஒழுக்கம் என்பதை மிக விரிந்த பொருளில் எல்லா நிலைகளிலும் வற்புறுத்தி வருவதைச் சிலர் சிந்திப்பதே இல்லை. வள்ளுவர் பெருமான், மலரினும் மெல்லிது காமம் சிலர்.அதன் செவ்வி தலைப்படுவார் (12.89) என்று கூறுவர். பல்லாண்டுகளுக்கு முன் இதனை இரும்புப் பட்டறையில் பணிபுரியும் பில்லா ரங்கா என்ற பணி யாளர்கட்கு எங்ங்னம் புரியும்? பேருந்துக்காகக் காத்திருக்கும் பள்ளியில் படிக்கும் அந்த இளம் மங்கையை இல்லத்தில் சேர்ப்பதாகச் சொல்லி அவளைத் தமது மகிழ்வுந்தில் ஏற்றிச் சென்று தமது பணியிடத்தில் பலவந்தமாகக் கற்பழித்து மகிழ்ந்தார்கள். பின்னர் அவர்கள் அப்பெண் தம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாள் என்று அஞ்சி அவளைக் கொன்று விட்டார்கள். செல்வமும் செல்வாக்குமுள்ள அவளது தந்தை யார் வழக்கு தொடுத்து குற்றவாளிகட்குத்துக்குத் தண்டனை பெறச்செய்தார் என்பது எல்லா நாளேடுகளிலும் வந்த செய்தி. அறத்துப்பாலின் ஆராய்ச்சியில் காமத்துப் பாலின் நுட்பமும் பொருட்டாலின் உள்ளுறையும் வட்டமிடுதலை வள்ளுவரை ஆராய்வார்க்குட் புரியாமற் போகாது. மனத்தின் மாசின்மையும் அகத்திணையின் மனோதத்துவமும் அங்குத் தாண்டவமாடு தலை அறிவார்கள்.