பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தோரணவாயில் உயிர் உணர்ச்சிகளாகிய இவ்விரண்டுக்கும் அப்பாற் பட்டதாய், கடந்த தாய். இவ்விரண்டையும் நெறிப்படுத்துவதாய் உள்ளதே அறம் என்பதும், அதன் பயனாகிய வீடு என்பதும் தெய்வ நிலைகள் செல்வத்துச் செல்வங்கள் செல்வம் புற எனப்பட்டதனால், செல்வத்துச் செல்வமாகிய அறம் வீ என்னும் அருளியல்புகளும் புறம் எனப்பட்டனவேயன் வேறில்லை. மற்று அறமும் வீடும் அகத்துள் அகம் என். தெளிவுக்குரியது.

فعi

"

ද් o

t5: o so றி o مېبي §§ أشمة G த் 'அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் என்றது அறத்தொடு நிற்றலை உணர்த்தும். அறநிலையை மேற்கொண்டு சிறந்ததாகிய வீடுபேற்றுக்குப் பழகுதல் என்பது இதன் கருத்து. இதில் தலைவன் தலைவி இருவரும் கூறப்படுதலின் மாதர்க்கு வீட்டு நிலை கூறாத சிலருடைய கொள்கை போன்றவை, தொல்காப்பியக் கொள்கையல்ல என்பது தேறி உணர்தற்குரியது. இவ்வாற்றால் தமிழ் மொழியில் கூறப் பெறுவன அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற் பொருள்களுமே எனவும், அவற்றின் பாலுணர்ச்சியோடு கூடிய வாழ்க்கைத் தொடக்கமாகிய பொருள்வழி இன்பம் என்பதிலிருந்தே அறநெறி கூறத் தொடங்கிப் பாலுணர்ச்சி குன்றிய அறத்தையும் வீட்டையும் உணர்த்தும் முக்கிய பொருட் பேறுடையதாகித் தமிழ் திகழ்கின்றது. ஆதலால் தமிழ் என்பது அறமேயாதல் தெளிந்து துணியப்படும். 1. தொல். பொருள். இளம்பூரணம்