பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கடவுள் வாழ்த்து வள்ளுவர் பெருமான் சிந்தித்து, சிந்தித்து அந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் தமது நூலை திருக்குறள் என்னும் தமிழ் மறையை அமைக்கின்றார். அந்த அரிய வான்மறை இயற்கை நுட்பங்களை யொட்டியே உலகியல் வகையில் வாழ்க்கை இயலாக அமைகின்றது. இயற்கை யுலகம் அண்டம் எனவும் பிண்டம் எனவும் இருவகையில் இயக்கம் கொண்டுள்ளது. அண்டத்திலுள்ள நலங்களைப் பிண்டங்கள் பெற்று உயிர் வாழ்க்கைக்கு உதவுகின்றன. மண், நீர், தீ, காற்று, வானம் என்பவை எல்லார்க்கும் தெரிய மிகவும் பருமனான இயற்கைப் பொருள்கள். இவற்றின் கூட்டே அண்டமாகவும் பிண்ட மாகவும் உள்ளது. அண்டங்கள் ஒன்றையொன்று அண்டிக் கொண் டிருக்கின்றன. கதிரவன் என்னும் அண்டத்தைப் பூமி, செவ்வாய், புதன் முதலான எத்தனையோ அண்டங்கள் அண்டிச் சுழன்று கொண்டுள்ளன. அங்ங்னமே வானத்தில் காணப்பெறும் எண்ணிக்கையில் அடங்கா அண்டங்கள் விண் மீன்கள் எனப்படும் அண்டங்களெல்லாம். ஏதோ ஒர் இயைபில் ஒன்றையொன்று நெருங்கி அதாவது அண்டிச் சுழன்று கொண்டுள்ளன. அண்டங்கள் ஒன்றோடொன்று அண்டிக் கொண்டிருப்பது போலவே அவற்றினின்றும் பிண்டுவந்த