பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கடவுள் வாழ்த்து பிண்டங்களும் அண்டங்களோடு தொடர்புற்றிருக்கின்றன. அண்டிக் கொண்டிருப்பதால் அண்டம் எனவும், அண்டத்தின் இயற்கைப் பொருள்களினின்றும் பிண்டு தனிப்பட்டு உருவாகி இருப்பதால் பிண்டம் எனவும் பெயர் பெற்றன. இங்ங்னம் உலகியற்கையானது அண்டயிண்டங் களாக அமைந்திருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அண்டம் என்னும் உலகுகளின் நலங்களைப் "பிண்டம் என்னும் உடம்புகளின் புலன்கள் ஏற்று உயிர் வாழ்க்கைக்கு உதவுதலே காரணமாதல் வேண்டும். அண்டபிண்டங்கள் அத்தனையும், நிலம். நீர் முதலிய ஐந்து இயற்கைப் பொருள்களாலும் நுட்ப மூலங் களாலும் அமைந்தவை. நுட்பமூலங்கலாவன சுவை, ஒளி ஊறு. ஓசை, நாற்றம் என்னும் ஐவகை நுண்பொருள்கள். இவற்றைத் தந்மாத்திரைகள் என்று சாத்திரங்கள் சற்றும், சுவையிலிருந்து நீரும், ஒளியிலிருந்து தீயும் ஊறு என்பதிலிருந்து காற்றும், ஓசை என்பதிலிருந்து வானும், காற்று என்பதிலிருந்து மண்ணுமாக ஐம்பூதங்கள் தோன்றும் எனவும் அவை விளக்கும். பிண்டத்தின் நுட்பங்களை அறிதல், அண்டத்தின் நுட்பங்களை அறிதலைவிட மேலானது. காரணம் பிண்ட நுட்பங்களின் மூலமாகத்தான் அண்ட நுட்பங்களை மக்கள் அறிய வேண்டும். அதோடு அண்ட நுட்பங்களின் வகைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அப்பிண்டத் திலுள்ள உயிர்கட்கு எளிதில் இயலும், அதிலும், மாந்தரின் உடம்புகள், உலகியல் நுட்பங்களை அறிந்து கொள்வதற்குப் பின்னும் எளிதாக உள்ளன. மற்ற உயிர்களின் பிண்டங்களை விட மாந்தர் உடலாகிய பிண்டங்கள் மாந்தரின் சிறப்பு அறிவு நிலைக் கேற்றபடி இயற்கையமைப்புகள் பொருந்தியுள்ளன. வ. வா. சி -3