பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 கடவுள் வாழ்த்து பின்னர் மூச்சை இயக்கும் வகையாலும் நா. இதழ் முதலியவற்றைப் பலவாறு மாற்றி இயக்குவதாலும் ஆ. இக முதலிய பல ஒலிகள் பிறக்கின்றன. இவற்றின் தொடக்கத்தில் அடிப்படையாக அகர ஒலி இருப்பதோடு அல்லாமல் அது இவற்றில் எல்லாம் கலந்தும் நிற்கின்றது. இதனை நன்கு உணர்ந்து தெளிந்த வள்ளுவர் பெருமான் கடவுளுக்கும். உலகிற்கும் உள்ள தொடர்பு இத்தகையதே என்று குறிப்பிட்டுச் சிறப்பித்தார். உலகம் கடவுளையே முதலாகக் கொண்டுள்ளது. இதனை எண்ணியே கீதையிலும் கண்ணபெருமான் நான் அகரமாக இருக்கின்றேன் என்று சொல்லிப் போந்தார். அறிவுடைய உயிர்கள் உலக இயற்கையில் ஆண், பெண் என இருபாலாக எல்லா உயிர்வகைகளிலும் இருப்பதனால், மூலமான முதற்கடவுளாகிய பேரறிவுப் பொருளும் ஆண் பெண் இயல்பில் அம்மையப்பராகவே இருக்க வேண்டும் என்னும் தெளிவும் ஏற்பட்டுவிடும். இந்த இயற்கை நுட்பங்களையெல்லாம் நன்கு உணர்ந்து தெளிந்த வள்ளுவப் பெருமான், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (1) என்ற முதற்குறளால் விளக்கினார். இதில் உவமையைப் பன்மையாகக் கூறி கருத்தை ஒருமையாகக் காட்டி இருப்பது போல அமைந்துள்ளது. உலகங்கள் பல என்பதையும் அது விளக்கிக் கொண்டுமுள்ளது. உலகம் வான்வெளியில் பலவாக உள்ளன என்று முன்னும் புதுமை அன்று. இந்த அறிவியல் காலமாகிய பின்னும் இன்று புதுமை அன்று உவமைகள் கருத்துவிளக்கத்திற்காக மட்டும் வருவ தல்ல. பல கருத்துகளை ஆசிரியர்கள் ஓர் உவமையின்