பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கடவுள் வாழ்த்து அன்னியே கூறிய வள்ளுவர் பெருமானின் குறிப்பாகும். பொதுவாக உவமைகளை விடக் கருத்துகள் முக்கியமானவை. கருத்தை விளக்கவே உவமை ஓரளவு உதவியாய் உள்ளது. ஆகவே ஐம்பொறிகளைவிடப் புருவ நடு முதல் மேலுள்ள தலையின் பகுதிகள் முக்கியம் என்பது கருதப்பெறும். அப்பகுதிகள் எவை எவை? அவை என்ன காரணத்தால் முக்கியம்? அம்முக்கியத் தன்மைக்கு ஏற்ப அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பனவெல்லாம் வணங்குதல் என்ற செயலில் அடங்கும். அற்புதம் அற்புதம்! கடவுளை வணங்கும் ஈடுபாட்டினால் நீடுவாழ்வது 3, வினைகள் சேராமற் போவது 5, மனக்கவலை அற்று இருப்பது 7. உலகச் சிக்கல்கள் தாக்காமல் ஒழிவது முதலிய நலங்கள்.பல உண்டாவதோடு மனித்தப் பிறவியின் ஒரே நோக்கமாகிய பெரிய பயன் ஒன்றையும் மக்கள் பெற முடியும். அதனை வேறு எதனாலும் அடைய முடியாது என்று முடிந்த முடிபாக வள்ளுவர் இறுதிக் குறளில் 10 எடுத்துக் காட்டுகின்றார். அது பிறவி நீங்குதலேயாகும். பற்பல கொள்கையாளர்கள் இவ்வுண்மையைக் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டு மென்பது அப்பெருமானின் பிறவிப் பெருங்கடல் (10) என்ற குறட்பாவில் பிறவியில் வந்த மனிதர்க்கு இனிப் பிறவாமை பெறுவதே கடமை என்பதை அறிவுறுத்துகின்றது. வேண்டுங் கால் வேண்டும் பிறவாமை 362 என்றார் அப்பெருமான். அதற்கு இறைவன் அடிசேரவேண்டும் (10) என்பது அப்பெருமான் கூறும் அறிவுரை அப்படியானால் கடவுள் என்பது பிறவாமை உடையது என்பது தானே பெறப்படும். 5.இதனை நினைவுகூரும் வகையில் ஆண்களும், பெண்களும் அவ்விடத்தில் பொட்டு இட்டுக் கொள்வர் போலும்!