பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கடவுள் வாழ்த்து வதைப் போலவே இறைவனுக்கும் பெரும் கோவிலை எழுப்பி யுள்ளனர். அருளாளர்களால் பாடல்கள் பெற்றபிறகு மங்களாசாசனம் அடைந்தபிறகு - திருக்கோயில்களின் அமைப்பு முறை பெருகிவிட்டதைக் காணலாம். பிற்காலத்தில் மக்களிடையே பக்தி குறைந்து, கோயில் பராமரிப்புக் குறைந்து விடுமோ என்ற கருத் தினாலோ வேறு என்ன காரணத்தாலோ கற்கோயிலை எழுப்பிச் சிறப்பித்துள்ளனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கோயில், இராமேசுவரம் இராமநாதர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழேச்சுரம் போன்ற கோயில்களைக் காண்போர் தற்கால நவீன முறையில் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் மூக்கில் விரலை வைத்து வியந்து மயக்கமுறும்படி அமைந்திருப்பதை நினைந்து பார்க்கலாம். மக்களுடைய பக்தி உண்ணும். பருகும் உணவுப் பொருள்களை பால், தயிர், தேன். பஞ்சாமிர்தம் போன்ற வற்றை அபிடேகப் பொருள்களாக்கியிருப்பதுதான் பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கட்கு விளங்காப்புதிர்களாகவே உள்ளன. நாட்டில் ஆயிரக்கணக்கான பெரிய சிறிய கோயில்களில் அபிடேகப் பொருள்களாக வீணாவதைக் காண அருள் நெஞ்சு பொறுக்க முடியாத நிலையை உண்டாக்குகின்றது. இவற்றை நைவேத்திய மாகப் படையல் பொருள்களாக்கி பக்தர்கட்கும் ஏழைப் பெருமக்களுக்கும் வழங்கலாமே என எண்ணத் தோன்று கின்றது. திருப்பதியில் வழங்கும் இலட்டுப் பிரசாதம் போல், அந்த அளவு சிறப்பும் திறமும் இல்லாத போதிலும் இலட்டுப் பிரசாதம் வழங்கும் முறை முருகன் பெருமான் கோயில்