பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நீத்தார் பெருமை 'நீத்தார் என்பதற்கு ஒழுக்கத்தால் நீத்தார் என்பது பொருள். ஒருவர் ஒழுக்கமுடையவராய் இருந்தால் அவர் விரைவில் நீத்தாராகி விடுவர். நீத்தார் என்பவர் அழுக்கு நீத்தார். து.யோர் என்பது கருத்து. வள்ளுவர் பெருமான் குறிப்பிடும் நீத்தார் என்பவர் நடையால் சிறந்து உள்ளம் துறந்தவர் என்பது தெளியப்படும். உள்ளபடியே அவருக்குத் தான் உலகத்தில் பெருமை உண்டு. சிலர் கடவுள் மாட்சியைப் பெருமை என்று கூறுவர் அது பொருத்தமன்று. காரணம், அவர் எக்காலத்தும் ஒரே தன்மையில் இருப்பவர். சிறுமையிலிருந்து பெருமைக்கு உயர்பவர் அல்லர். ஆகவே அடியார்கட்கு மட்டுமே பெருமை கூறுவது பொருந்தும். சிறுமையிலிருந்து பெருமைக்கு உயர்பவர்கள் அவர்களே. வள்ளுவர் பெருமான் அந்த இயற்கை நிலை புலம்பட நீத்தார்க்குப் பெருமை கூறினார். அவர் பெருமை அளவுபடாதது.நீத்தார் பெருமை என்னும் தொடர் பொருளழகு மிக்கது. கருத்துப் பிழையும் அற்றது : வள்ளுவர் பெருமான் இந்த அதிகாரத்தில் நீத்தார் என்பவரைத் துறந்தார்'2 அறம் பூண்டார்.ே ஒரைந்தும் காப்பார், (4) ஐந்தவித்தார்(5), பெரியர் (6) ஐந்தின்வகை தெரிவார் 7, நிறைமொழிமாந்தர்(8), குணக்குன்று (9), அந்தணர் (10) என்றெல்லாம் கருத்து விளக்கம் தந்து வேறு வேறு பெயர்களால் வழங்கியிருப்பது ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. வ. வா. சி - 4