பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 நீத்தார் பெருமை .ே ஐந்து என்பது 4 ஐம்பொறிகளைக் குறித்தது. இவற்றை யானைகளாக உருவகம் செய்கின்றார் ஆசிரியர் யானைகளை அங்குசத்தால் அடக்குவதுபோல ஐம்புலன் களையும் மன உறுதியால் அடக்க வல்லவர்கள் முத்தி வாழ்விற்கு வித்து ஆவார்கள். இவர்கள் பெருமையும் அளவிடற்கரியது. 14 ஐந்தவித்தான் ஆற்றலுக்கு 5 இந்திரன் சான்றாக வந்தமை ஓர் இயற்கைக் கருத்தை உட்கொண்டது. இங்கு இந்திரன் என்றால் மழை என்பது பொருள். இந்திரன் மழையை இயக்கும் தேவன் கடவுள். அந்த அதிகாரத்துக்கு கருவாக அவன் அமைந்தவன். ஐந்தவித்தான் ஆற்றலுக்கு மழையே சான்று என்பது அத்தொடரின் கருத்து. ஐந்தவித்தானும் முயன்று மழை பெய்வித்தல் அவ்வளவு சிறந்ததன்று. ஐந்தவித்தார் அவர் இயல்பில் இருக்க, அவர் ஆற்றலுக்கு மழை தானே பெய்யுமானால் மட்டுமே அவர் ஆற்றலுக்கு அது சிறந்த சான்றாகும். ஆற்றல் என்றும் சொல் இயல்பில் செயலாற்றலை உணர்த்தும், 2. சிலர் அகலிகையின் கதையை உணர்த்துவதாகக் கருதுவர். இது தவறு. திருக்குறளில் கதை விளக்கங்கள் எங்கும் இல்லை. இருக்குறள் இராமாயணத்துக்கு முந்திய நூல். மேலும் அந்தக் கதையினால் சாபம் இடுதல் வருகிறது. சாபம் இடுதலால் ஆற்றல் குறையும். ஆற்றல் வளத்தலோஅளவில் இருத்தலோஅமையாது. ஆற்றல் குறையாமல் இருக்க வேண்டுமானால் அந்த ஆற்றலால் இயல்பாகவே சுற்றுச் செயல்கள் நடைபெற வேண்டும். நல்லார் ஒருவர் உளரேல் அவ் கருத்தின்றியே எல்லாருக்கும் பெய்யும் மழைபோல இயற்கைச் செயல்கள் நடைபெற வேண்டும்.