பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 நீத்தார் பெருமை அவர்கள் குணசாலிகள். பிறரை ஆற்றலால் பொருட்டே அது தோற்ற மளிக்குமேயல்லது கெடுக்கும் பொருட்டன்று. (9) அந்தணர் (10): இங்கு அந்தணர் என்னும் பெயரை அறவோர் என்று வேறு ஒரு பெயராலும் குறிப்பிடுதல் கவனிக்கத் தக்கது. திருக்குறள் ஓர் அறநூல் அல்லவா? எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் அறவோர் ஆகின்றார். இதிலிருந்து ஓர் அழகிய உண்மையை நாம் உன்னி அறியலாம். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுதலே அது எவ்வுயிரினிடத்தும் வேற்றுமை காட்டாமல் செந்தன்மை பூண்பதே அந்தண்மை. அதனை உடையவரே அந்தணர். இததகைய அறச்செய்கை அல்லாதவர். தன்னலப் பற்று அறாத வர் நீத்தார் அல்லாதவர் அந்தணர் ஆகார். செந்தண்மை என்பது தண்மையை எவ்வுயிர்க்கும் நடுநிலையாக ஆள்பவர் என்பதை உணர்த்தும், செம்மை, இங்கே நடுநிலைமை. இக்காரணங்களால் அந்தண்மையின் தெய்விக அழகு இனிது தெளியப்படும். அந்தணர் என்போர் அறவோர்,மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுக லான் (30) தம் உணர்வு சற்றுமின்றி அருட்பெருமையில் திளைப்பவரே நீத்தார் என்பது இரத்தினச் சுருக்கம்!