பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணைநலம் அன்புடன் வாழ்வதே இல்வாழ்க்கையின் பண்பு. அறத்தைப் போற்றி வாழ்வதே இல்வாழ்க்கையின் பயன் 45 அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை 49 மற்றவர் களையும் நல்வழியில் வாழச் செய்து தானும் அறநெறி யிலிருந்து தவறாமல் வாழவல்லது இல்வாழ்க்கை. ஆகையால் தாம் மட்டிலும் நன்மை அடைவதற்காகத் தவம் செய்வோரின் (துறவற வாழ்க்கையைவிடப் பிறர் நலம் கருதிய இல்வாழ்க்கையே சிறந்தது. ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து (48)" என்பது வள்ளுவர் பெருமானின் வாய்மொழி பொய்யா மொழி: இல்லறம் சிறப்பது ஆதலின் வாழ்க்கைத் துணை நலமாக இருக்கும் பெண்ணைப் பொறுத்தது. 'இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை என்பது பாட்டியின் வாக்கு அவள் இல்லத்தரசியாக இருப்பதனால் இல்லாள் - இல்லத்தை ஆள்பவள் எனக்குறிக்கப்பெற்றாள். இதுபோல் கணவனைக் குறிக்கும் சொல் இல்லை. அவனைக் குறிக்க இல்வாழ்வான் என்ற ஒரு சொற்றொடர் உள்ளதேயன்றி சொல் இல்லை. அப்படி ஒரு சொல்லை விரும்பி இல்லான் என்று 1. இல்வாழ்க்கை 2. மேலது 9 3. மேலது - 8