பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

球 4蛋 வாழ்க்கைத் துணைநலம்

பெண்ணின் மாட்சியே இரண்டு குறள் கணவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பெண்டிரின் பெருஞ்சிறப்பு ஒரு குறளிலும் 51. புகழ்க்குரிய அறக் கடைமைகளைப் புரியும் இல்லாளின் மாண்பு மற்றொரு குறளிலும் 55 குறிக்கப் பெற்றுள்ளன. இருவ نومب&;iع xyభ க் త్ర ம் இவ்வுலகியில் நலம் இருப்பதோடு மனைவியின் மாண்பு சிறப்பால் மேல் உலகத்திலும் நலம் விளைவிப்பதாய் உள்ளதென்று உண்மை கூறியவாறாம். அங்ங்னமாயின் கணவனுக்கு மேல் உலகப் பேறு இல்லையோ என்று ஐயுற வேண்டியதில்லை "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும், தெய்வத்துள் வைக்கப்படும்' (50) என்பதால் அவன் வானுறையும் தெய்வத்துள் ஒருவனாக இடம் பெறுவான் என்று பிறிதோரிடத்தில் கூறப் பெற்றுள்ளது. இங்கே கணவன் - மனைவி என இருவரையும் ஒருங்கு குறிப்பிடும்போது அவ்விருவரில் பெண்டிரின் பெருஞ்சிறப்பு விளக்கப் பெற்றது. மனைவியின் குணத்தை மங்கலம் என்ப மனை மாட்சி (60 என்பதில் மங்கலம் என்னும் சொல்லால் வள்ளுவர் பெருமான் சிறப்பிப்பார். மங்கலம் என்பதை இயற்கை அழகு என்று சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுவார். அஃது அழியாத வாடாத தன்மை அத்தகைய மங்கல இயற்கை அழகுக்கு மேலும் அழகு ஊட்டுவதாகிய அணிகலன் போன்றது மக்கட்பேறு என்பவற்றையெல்லாம் அநுபவித்து மகிழ்கின்றோம். 9. சிலப்-மங்கல வாழ்த்து