பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 தாயும் நூலாசிரியரும் (Head - presentation) Ésþá srpg = Güesuus & குழந்தையின் தலை, கீழாகத்தான் இருக்கும் கால்களும் கைகளும் வளைந்தோ மடிந்தோ இருக்கும். தலைகீழ் நிலையில் இருப்பதனால் அதுவே பிறப்பின் பொழுது முதலில் வருவது இயல்பாகும். தலை வட்டமாகவும், உறுதியாகவும் இருப்பதால், அது கருப்பையின் வாயினை விரியச் செய்யவும் துணை செய்கின்றது. எனினும் சில சமயம் குழந்தை வேறு நிலையிலும் இருந்து முதலில் முகம், கை, அல்லது கால், ஆசனம் என்ற முறையில் உதயம் ஆவதும் உண்டு. இத்தகைய பிரசவங்கள் அடிப்புறப் பிரசவங்கள் (Breech deliveries) என வழங்கப் பெறுகின்றன. பிரசவ வேதனையின்றிக் குழந்தை பிறப்பதுதான் இயல்பு. சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் நீர் கழிந்த பிறகு இன்ப உணர்ச்சி ஏற்படுவதுபோல் குழந்தை பிறந்தவுடன் இன்ப உணர்ச்சி ஏற்பட வேண்டும். பிரசவ வேதனையின்றிக் குழந்தை பிறப்பதுதான் இயல்பு. இயல்பாக நடைபெற வேண்டிய ஒருநியதிக்கு மக்கள் சிரமப்பட வேண்டியதில்லை. உண்மை யில் பழங்கால மக்களும், இன்று விவசாய மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்களும் பிரசவத்தைச் சிரமம் எனக் கருதுவ தில்லை. உறையிலிருந்து வாளை உருவுவது போன்று குழந்தை எளிதாக அவர்கட்குப் பிறந்து விடுகின்றது. பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவம் சிரம மாகவே முடிகின்றது. இதனால் 'பிரசவ வேதனை என்ற சொற்றொடர் மக்கள் வாக்கில் தாண்டவமாடுகின்றது. கருப்பை, பிரசவப் பகுதி, குழந்தை இவை மூன்றில் ஏதேனும் ஒன்றில் கோளாறு ஏற்பட்டாலும் பிரசவம் மிகவும் சிரமமாக முடிகின்றது.