பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 தாயும் நூலாசிரியரும் கொள்ள வேண்டியதில்லை என்றும் அரசைத் தாங்கும் இராமன் அதைச் சிறப்பாகக் காப்பான் என்றும் கூறி இராமனுடைய குணநலன்களையெல்லாம் எடுத்துரைக் கின்றார் வசிட்டர்’. தசரதனுக்குப் பெருமகிழ்ச்சி உண்டாகின்றது. இதனைக் கம்பநாடன், மற்ற வன்சொன்ன வாசகம் கேட்டலும் மகனைப் பெற்ற வன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் பெருவில் இற்ற வன்றினும் எறிமழு வாலவன் இழுக்கம் உற்ற வன்றினும் பெரியதோர் உவகையின் ஆயினான் " என்று காட்டுவான். பன்னெடுங்காலமாக மகப்பேறு இல்லாது அப்பேறு உண்டான பிறகு தசரதனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விடவும். இவ்வயைத்து மன்னர் எவராலும் நாணேற்ற முடியாத சிவதனுசு தன் மகன் நாணேற்றும் போது ஒடிந்து விட்டது என்ற செய்தியைக் கேட்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டிலும் இருபத் தொருதலை முறையாகச் சத்திரியர்களைக் கருவறுத்து நின்ற பரசுராமன் தன் மகனிடம் தோல்வியடைந்த நாளில் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாக மகிழ்ச்சி ஏற்பட்டது என்று கூறுவதைக் கண்டு மகிழலாம். 3.மேலது -மேலது - மேலது -35-43 4. மேலது. மேலது. மந்ரெப்-4