பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மக்கள் செல்வம் என்றே வழங்குகின்றார். இச்சொல்லிலும் வீடுபேறு என்பதிலும் பேறு என்ற சொல் செல்வம்' என்ற சொல்லை விட அற்புதமான பொருள் தருவதை அறிந்து மகிழ்கின்றோம். இன்றைய உலகில் பெரும்பாலும் மக்கள் ஆண் பிள்ளைகளையே விரும்புகின்றார்கள். இவர்கள்தாம் இறந்தால் கொள்ளிவைப்பதற்கும் திவசம் கொடுப்பதற்கும் ஆண் மக்களே தகுந்தவர்கள் என்று கருதுபவர்கள். இவர்கள் பெண்பிள்ளைகள் தம் பெற்றோர்பால் - தாய், தந்தை என்று வேறு பிரிக்காமல் காட்டும் அன்பையும் பரிவையும் பாசத்தையும் நேசத்தையும் அறியாத அறிவற்ற பிறவிகள் மக்கற்பேறு அதிகாரத்தில் அன்னைக்கு அருமருந் தனையமகன் செய்யும் உதவி யாது என்று தெரிவிக்காமல் அப்பனுக்கு மட்டும் அம்மகன் செய்யும் உதவி இன்னது என்று தெரிவிக்கின்றாரே ஆசிரியர் வள்ளுவர் என்றும். இதனால் அப்பெருமான் ஆண்பிள்ளைகட்கே முதன்மை தருவதாக அமைகின்றதே என்றும், ஒரு சிலர் தவறாக எண்ணுகின்றனர். அத்துடன் மக்கள்" என்னும் பொதுமையிலிருந்து மகனை" மட்டிலும் தனித்தெடுத்துச் சிலகுறள்களில் ஆண் பிள்ளை கட்கே மேன்மை காட்டுகின்றார் என்றும் கருதுவர். இது தவறு. பெருந்தவறு. இவர்கள் இவ்வதிகாரத்தை நன்கு கற்று வள்ளுவர்பெருமானின் உள்ளத்தின் நுட்பத்தை அறியாத வர்கள் என்றே கருத வேண்டும். வள்ளுவத்தை ஆழ்ந்து நோக்கினால் அப்பெரு மான் அப்படியொன்றும் ஆண்மக்களுக்கு மட்டுமே சிறப் பளிக்க வில்லை என்பது புலனாகும். மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் ஏழு குறள்கள் 123456.8 மக்கள் என்று பொதுச் சொற்களையே பெற்றுள்ளன. விவரம் :