பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3誌 மக்கள் செல்வம் தெளிவு. இதனால் இயல்பாகவே மகளிருள் பெரும்பாலோர் கற்பு வலிமையும் சான்றாண்மைக்குணமும் மிளிர்பவர்களாய்த் திகழ்கின்றனர். கல்விக்கும் சான்றாண்மைக்கும் மிக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய பேருழைப்பு ஆண்மக்களுக்கே பெரும்பாலும் தேவையாயுள்ளது. அஃதுடன் ஓர் ஆண் மகனது கல்வி நிறைவுக்குத் தந்தையின் முயற்சிகள் இன்றி யமையாதவை. சான்றாண்மை வளர்ச்சிக்குத் தாயின் துணை சாலவும் வேண்டப்பெறுபவை. இந்த இயற்கையைத் தெளிவிப் பனவே தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி? எனவும், தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்'9 எனவும், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவிi) எனவும் மகனைச் சுட்டிக் காட்டிக் கொண்டு வரும் குறள் பாக்களாகும் என்பதை ஒர்ந்து அறிய வேண்டும். 'மக்கள் என்னும் சொல்லைப் பன்மையாகக் கொண்டு ஆண் மக்கள் என்றே பொருள் கொள்ளலாகாதோ? என வினவலாம். அது பொருந்தாது. ஏன் எனில் அகவலிமையில் சிறந்த பெண்மகளை வள்ளுவர் பெருமான் கருதவே இல்லை என்று ஏற்பட்டு விடும். இஃது அசம்பாவிதம் அல்லவா? ஆண் பெண் இருபாலராய்க் குழந்தைகள் பிறக்கும் இயற்கை நிலைமைக்கும், இருபாலராய் இயைந்து வாழ்க்கை நடத்தும் உலகியல் இன்றியமையாமைக்கும் ஒவ்வாமல் வள்ளுவர் பெருமான் மறைநூல் இயற்றுவது பொருந்தாது அல்லவா? 'மக்கட்பேறு அதிகாரத்தில் வரும் கருத்துகள், முறைமைகள் முதலியவற்றில் ஆழ்ந்து கருத்தைச் செலுத்தி 2. தந்தையொடு கல்வி போம் என்ற பொன்மொழியை நினைவுகூர்க,