பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 54 "அப்படிஇல்லை, தம்மின், தம் என்னும் பன்மைகள் தந்தையர் பலரைக் குறிக்கும் பன்மையாகவோ, அல்லது தந்தை ஒருவதையே குறிக்கும் மரியாதைப் பன்மையாகவோ லத்திருக்கலாம் என்று கருதினால் இந்த அதிகாரத்தின் பின் இரண்டு குறள்களில் ஈண்டு மூன்றாவது நான்காவது குறள்களில் தன் மகனை எனவும் 69 இவன் தந்தை 70) எனவும் ஒருமையில் கூறியிருப்பது பொருளற்றதாய்ப் போய் விடும் என்பதையும் சிந்தித்தல் வேண்டும். தம்மின் தம்மக்கள் அதிவுடைமை 168 என்பது பெற்றோர் எனப்படும் ஆண் பெண் இருவரையும் குழந்தைகளாகிய ஆண் பெண் இருவரையும் குறிப்ப தென்றே கொள்ளலாம். அப்படித்தான் கொள்ளவும் வேண்டும். குறள்களின் கருத்தைத் தனித்தனி யாகப் பிரித்து நோக்காமல் குறள்களின் கருத்து வள்ளுவர் பெருமான் ஒருவரின் கருத்து எனக் கொண்டு சிந்திக்க வேண்டும். ஒருவரே மாறுபட்ட கருத்துகளைக் கூறார் என்பது தாம் அறிய வேண்டிய உண்மை. "தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் உலக்கும்" எனத் தாயின் சொல்லாக வைத்துக் கூறியது உண்மையில் தாய்க்கு மகன் செய்த கடமையே ஆகும். பிறர் புகழும் வாயிலாக, பாராட்டும் வாயிலாக, போற்றும் வாயிலாகத் தாய் மகிழும்படி மகன் சான்றோனாய் உயர்ந்து நடந்து மகிழ்விக்கின்றான் என்பதே இதன் பொருள் என்பதை ஒர்ந்து உளங்கொள்ளுதல் வேண்டும். இக்கருத்தை வள்ளுவர் பெருமான் தாயின்மீது வைத்துக் கூறியது குணசாலியாகத் தன் மகனை வளர்க்கும் பொறுப்பு தாய்க்கு இருப்பதைக் காட்டும் பொருட்டு இவ்வாறு கூறினார் எனக் கொள்ளல் ஏற்புடைத்து. தாயின் கடமை, மகன் கடமை இரண்டும் ஈன்ற பொழுதின்