பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 மக்கள் செல்வம் என்ற ஒரு குறளில் வைத்தது. தாய்-மகன் உறவிலுள்ள சிறப்பு ஒருமை கருதியதாகும் என்னும் நுட்பத்தையும் நுணுகி அறிதல் வேண்டும். தந்தை மகனுக்கு ஆற்றும் கடமையும் மகன் தந்தைக்கு ஆற்றும் கடமையும், தனித்தனிக் குறளில் வைத்தது இருவர்க்கும் உரிய அறிவு முயற்சிகளின் விரிவு கருதி என்னும் நுட்பத்தையும் தெரிந்து கொள்ளல் வேண்டும். ஆதலால் தந்தைக்கு மக்கள் செய்யும் கடமை கூறியதுபோல் தாய்க்கும் கூறவில்லையே என்று கருதுதல் பொருந்தாது. மேலும் இருகுற ளால் அறியக் கூடிய உண்மை மற்றொன்றும் உள்ளது. அஃது என்ன? சான்றோன் எனக் கேட்ட தாய் என்றலால் மக்களின் அறிவு நலத்தை விடக் குண நலத்தைத் தாய் விரும்புதல் தெரிகின்றது என்பதை அறிய முடிகின்றது. ஏனென்றால் குணநலத்தால் சிறந்தவரே சான்றோ தலின் குணநலம் சான்றோர் நலனே' (982' என்ற குறளின் தொடர் இவ்வுண்மையை ஒளிவிட்டுக் காட்டும். இக்கூறியவற்றால் பெற்றோர் மக்களை ஆண் பெண் வேற்றுமை கருதாது செல்வமாகப் போற்றுகின்றனர் என்ற உண்மை அறியப் பெறும். அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (84) "மக்கள் மெய்திண்டல்'(65) என்பனபோல் பொதுவாக 'மக்கள் என்றே கூறியுள்ள மையால் இஃது உறுதிப்படும். 5. சான்றாண்மை - 2 வ. வா. சி - 6