பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 வாழை நல்கும் படிப்பினை முக்கனி பிழிந்து என்ற வள்ளலார் வாக்கினுள் முக்கனி' களிலும் சிறந்த முதன்மைக் கனிவளம் உடைய மரம் அது. அதனை ஞானமரம் என்றும், ஞானத்தினும் சன்மார்க்கமரம்" என்றும் 'அறத்துக்கு ஒரு மரம் என்றும் கூறும் ஒரு மரபும் உண்டு. திருக்கழுக்குன்றத்தின் தலமரம் வாழையே, வடலூர் வள்ளலார் அடியார் மரபுக்கு இதனை உவமானமாகக் கொண்டு வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம் என்று அருளிச் செய்திருப்பதையும் ஓர்ந்து உளங் கொள்ளலாம். வாழைமரம் குலைவிடுகிற வரையில் வாழ்கிறது: பின்னர் அது வீழ்கிறது அதனால் குலை விடுவதற்காகவே அது அடுக்கடுக்காய் இலைவிட்டு வந்ததாகத் தெரிகின்றது. அந்த உயரிய நோக்கம் நிறைவேறியவுடன் வாழை தன் கடமை தீர்ந்து விட்டதாகக் கருதுகின்றது. தான் தோன்றி வளர்ந்த முயற்சி வெற்றியுற்றதாகவும் துணிகிறது. தன் உயிர் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தயார் நிலையில் உள்ளது: இங்ங்னம் வாழ்வின் ஒரே நோக்கமாய், ஒரே தடவையாய், ஒரே குலையை வழங்கி விட்டு உயிர் விடுகின்ற இந்நிகழ்ச்சியில் உள்ளத்தை உருக்கும் தன்மையுள்ள உண்மை ஒன்று பொதிந்து கிடக்கின்றது. 2.'வாழைக்குத்தான் ஈன்றகாய் கூற்றம் என்பது ஒளவைப்பாட்டியின் வாக்கு குலை தள்ளியவுடன் அதனை மக்கள் வெட்டிவிடுகிறார்கள். காய் அதன் கூற்றமா? (எமலாய்) விடுகின்றது. இந்த ஒரே குலையைத்தன் கன்றுகளுக்காகவோ ஒரு சிறிதும் வைக்காமல் முழுவதையும் பிறர்க்காகவே உலகுக்காகவே வழங்கி விடுவதுதான் அந்தப் பேருண்மை. இறுதியில் தன் உடலின் தடுத்தண்டையும் பிறர்க்கே உரியதாக்கி விட்டு மறைந்து விடுகின்றது. கீழ்க்காட்டிய குறளில் உள்ள 'என்பும் உரியர் பிறர்க்கு என்னும் உயரிய பண்புக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றது. வாழைக்கன்றுகளும் தம் தாய் வழியையே பின்பற்றுகின்றன. வாழையின் வாழ்க்கைவில்தான் மரபுவழி (heredity) சிறிதும் பிசகாமல், வழுவாமல், ஒழுங்காய் நடைபெற்று வருகின்றது.