பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3i o W}፧ இயற்றி வெளியிட்ட பின்பு, 124 ஆவது வெளியீடாகிய "வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் எனும் நூலுக்கு அணிந்துரையை அளிக்கும் அரியதோர் வாய்ப்பை வழங்கிய மையில் ஒரு நுட்பம் புலனாகிறது. 124 எண்ணில் அடங்கிய இலக்கங்களை கூட்டினால் 1+2+4) ஏழு என்னும் எளிய விழுமிய எண் உருவாகும். இந்நூலின் கருப்பொருளாகிய திருக்குறளுக்கும் நெருங்கிய உறவை அறிய இயலும். அகவை (89) முதிர்ச்சியிலும் பல்வேறு இடர்ப் பாடுகளையும், இடையூறுகளையும், இன்னல்களை யும் புறக்கணித்து, வாக்கு வாளை விட வலிமை மிக்கது எனும் மூதுரையை முற்றிலும் நம்பும் நூலாசிரியர், ஆழியில் மூழ்கி முத்துக்களை கண்டறிவதுபோல், திருக்குறள் இலக்கியப் பெருங்கடலில் மிக நுண்ணிய கருத்துக்களை அறிந்து, வரைகிறார் இப்படைப்பை, அறிவுக்கு விருந்தாக, கருத்துக் கருவூலமாக பட்டறிவுப் பாசறையாக சிந்தனையைத் துண்டும் ஊக்கியாக விளங்குகிறது இந்நூல். புதிய அணுகுமுறையில் உருவாக்கப்பட்ட இயற்றப்பட்ட இந் நூலைச் சிறப்பிக்கவும், படைப்பாளியைப் பாராட்டவும் அணிந்துரையைத் துணிந்து, பணிந்து வழங்குகிறேன் அற நூலுடன் தொடர்புடைய அருமையான நூலை முழுமை யான ஆர்வத்துடன் படிக்க வாய்ப்பை வழங்கிய பேரா சானுக்கு முதற்கண் வணக்கங்கள் கணக்கில. அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது. இவ்வரிய இனத்துக்கு இயல்பாக வழங்கப்பட்ட சிந்தனைத் திறன் என்பது தெளிவு. சிந்தனையே இயற்கையில் மறைந்துள்ள உண்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்து பவன் அறிஞனாவான். சிந்தனையற்றவன் பேதை, சிந்தித்த