பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6露 நன்றி மறவாமை என்று கூறுகின்றான். 'எந்நன்றி கொன்றார்க்கும் என்ற திருக்குறள் தொடருக்கு சிதைவு அகல். வதைபுரிகுநர் என்ற கம்பனின் பாடல் பகுதி விளக்கம்போல் அ.ை திருப்பதைக் காண்கின்றோம் அன்றோ? 'குறிப்பறிதல் என்ற பண்பு நாடாளும் அரசனுக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை யாவரும் அறிவர். முகத்திலிருந்து அகத்திலுள்ளவற்றை அறிந்து கொள்ள முடியும் என்பதை வள்ளுவர், அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (706)" (கடுத்தது - மிக்கது) என்ற குறள் மூலம் புலப்படுத்துவார். தன்னை அடுத்த பொருளின் நிறத்தைப் பளிங்கு காட்டுவது போல ஒருவரது உள்ளக்கிடக்கை முகத்தில் பிரதிபலிக்கும். இதனைக் காட்டும் முறையைக் காண்போம். சீதாப் பிராட்டியை இராமனிடம் கொண்டு விட்டு விடும்படி வீடணன் பலவிதங்களில் கூறியும் இராவணன் பிடிவாதமாக இருக்கவே, அவன் இராமனிடம் அடைக்கலம் புகுந்து விடுகின்றான். மாற்றார் பக்கத்திலிருந்து வந்தவனை ஏற்றுக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சி ஜனநாயக முறைப்படி நடைபெறுகின்றது. சுக்கிரீவன் சாம்பவான் முதலியோர் கூடாது என்று ஒரு முகமாக முடிவு கூறுகின்றனர். அநுமன் ஏற்றுக் கொள்ளலாம் என்ற உறுதியான முடிவு கூறி அதற்குரிய காரணங்களையும் தெரிவிக்கின்றான். வீடணன் முகத்திலிருந்தே அவன் உள்ளத்தை அறிந்து கொள்ளலாம், என்று கூறும் மாருதி, 5. குறிப்பறிதல் - 8