பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ன் வாழ்வியல் சிந்தனைகள் 62 'உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற மென்னத்தம் முகங்களே விளம்பும் ஆதலால்' கள்ளத்தின் விளைவெலாம் கருத்தில்இருள்.ஆம் பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ?? என்று தெரிவிக்கின்றான், கீழ்க்குறிப்பிட்ட குறட்பாவின் கருத்து எவ்வளவு நயமாகப் பாடலில் பெய்யப் பெற்றுள்ளது என்பதை அதுபவித்து மகிழ வேண்டும். திருக்குகுறளில் கூடாநட்பு:183 என்ற அதிகாரத்தில் உள்ள தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணிரும் அனைத்து (328) என்ற குறள் 18 அற்புதமானது. பகைவரின் சொல்வணக்கத் தையும் கைகூப்பலையும் நம்பலாகாது. இக்கருத்து கம்பராமா யணத்திற்கு முற்பட்ட இலக்கியமாகிய சீவகசிந்தாமணியில் எங்ஙனம் எடுத்தாளப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுவேன். கனகமாலையை விட்டுச் சீவகன் தன் நண்பர் களுடன் தண்டாரண்யத்தில் தவப்பள்ளியிலுள்ள அன்னை விசயையைக் காண்கின்றான். தண்டாரண்யத்தை நோக்கி வரும்போது நந்தட்டன் பதுமுகனிடம் அவன் எவ்வாறு விசயனுக்கு மெய்காப்பாளனாக இருந்து அவனைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றான். பகைவர்களைத் தெளிவது அருமை என்று கூறும் முகத்தான், தொழுததம் கையின் உள்ளும் துறுமுடி அகத்தும் சோர அழுதகண் நீரின் உள்ளும் அணிகலத்(து) அகத்து மாய்ந்து 6.கம்பரா. புத்த வீடணன் அடைக் 91. 1. முத்திநாதன் கதையில் (பெரிபுரா) இது நன்கு தெரியும்.