பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6ア வாழையும் வள்ளுவமும் காரைக்குடி வாழ்விலும் 1950-60 திருப்பதி வாழ்விலும் 1960-77) சென்னை வாழ்விலும் (1981 முதல் வீட்டருகில் வாழைமரங்களை வளர்த்து தோப்புபோல் ஆக்கி அதன் அழகைக் கண்டு களிக்கும் அடியேனுக்கு இது நன்கு தெளிவாகத் தெரியும். வாழையைத் 'தகையணங்கு உறுத்தல் என்றே சொல்லி விடலாம். கைபுனைந்தியற்றா வாழைத் தோப்பின் அழகினை, தனிப்பட்ட வாழை மரத்தின் வனப்பினை - இவற்றின் காட்சிகளை என்னென்றுரைப்பது இல்லங்களிலும் தோட்டங்களிலும் இவற்றைக் கண்ணுறும்போது நம்மனத்தில் கிளர்ந்தெழும் இன்பநிலையை எவ்வாறு கழறுவது? 'தகை யணங்குறுத்தல் காமத்துப்பால் அதி -1 என்பதிலுள்ள குறள் பாக்களைப் படிக்கும்போது நம்மனத்திலும் எழும் காட்சி உணர்வுகளும், வாழையைக் காணும்போது உண்டாகும் உணர்வுகளும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதை ஒருவன்று உணரலாம். வாழைத்தோப்பினுள் நுழையும்போது அதன் மட்டையைத் தடவுதல், விரியும் நிலையிலுள்ள குருத்திலையை நீவிப் பார்த்தல், போன்ற செயல்களால் இதனை அறியலாம். 'மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் (குறள் 65) என்ற மொழிக்கேற்ப தொட்டுணர்வுக்கு இதமாக இருப்பதை உணரலாம். இவையே வாழையின் இன்பத்திறன்! பொருள்திறன்: வாழையில் கிடைக்கும். தண்டு, இலை, பூ, காய், கனி முதலியவை அனைத்தும் வாழையின் பொருள் அதிகாரம்; வாழையின் எல்லாப்பொருள்களும் மக்களுக்குத் தேவைப்படுகின்றன. தன்னுடைய பொருள்கள் அனைத்தையும் தனக்காகவோ தன் கன்றுகளுக்காகவோ ஒரு சிறிதும் வைத்துக் கொள்ளாமல், முழுவதையும், பிறர்க்காகவே,