பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும்

அன்பும் பிரியமு முள்ள தாய்மார்களே!

பெரியோர்களே!!

அன்பர்களே!!!

உங்கள் அனைவருக்கும் இந்த நல்ல நாளிலே எனது தாழ்மையான வணக்கம். கோவை அனுப்பர்பாளையம் திருவள்ளுவர் படிப்பகத்தின் மூன்றா தோற்றுவாய் வது ஆண்டு விழா, பெரியோர் களாகிய உங்கள் முன்பு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே பங்குபெறும் பேறு எனக்குக் கிடைத்தமைக்காக உள்ள படியே நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை ஒரு பெறும் பேறாகவும் கருது கின்றேன். திருவள்ளுவர் படிப்பகம் மூன்று ஆண்டுகளாக இந்நகரில் நடந்து வருவதும், ஆங்கிலம் படித்து அலுவல் களிலே இருக்கின்ற நல்ல தமிழ் இளைஞர்கள் இதிற்பங்கு பெற்றுத் திருக்குறள் வகுப்பை நடத்தி அதிற் படித்து வருவதும், எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்திகளாகும்.

திருவள்ளுவர் படிப்பகத்தையும், திருவாளர்கள் சி.கே. சுப்பிரமணிய முதலியார், சி எம். இராமச்சந்திரன் செட்டியார் அ. கந்தசாமிப் பிள்ளை முன்னுரை போன்ற பழம்பெரும் புலவர்களையும் கொண்டது இந்த நகரம். சிறந்த புலவர்களைக் கொண்டு திருக்குறள் வகுப்பை நடத்திக் கொண்டு வருகின்ற கழகத்தைச் சேர்ந்த நீங்கள் திருவள்ளுவரைப்பற்றியும் திருக்குறளைப்பற்றியும் தெரிந்.