பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வள்ளுவரும் குறளும்

உயர்குடி மகனுக்கும் பிறந்தார் என்பது மற்றொரு கதை. ஏலேலசிங்கனாலே எடுத்து வளர்க்கப்பெற்றார் என்பது இன்னொரு கதை. அவர் மயிலாப்பூரில் கோயில் கொண்டார் என்பது வேறொரு கதை அவர் வாசுகி என்ற ஒரு பெண்ணை மணந்தார்; அந்த அம்மாள் கிணற்றிலே தண்ணிரை இறைப்பார்கள்; அடி!' என் பார்; குடத்தை விட்டுவிட்டு ஓடிவருவார்கள்; திரும்பிப் போய்த்தான் பாதியில் தொங்கும் குடத்தை இழுப்பார் கள் என்பது இன்னொரு கதை எத்தனையோ கதை களைத் தமிழ்நாட்டில் புகுத்தி வைத்தார்கள். இந்தக் கதைகளால் உங்களுக்கும் நமக்கும் ஆவதென்ன? உண் மையான வரலாறு எது?' என்ற ஐயப்பாடு தமிழ் நாட்டிலே உள்ளே புலவர் பெருமக்களுக்குத்தோன்றியது "வள்ளுவர் வரலாறு எது?' என்று அறியப் புலவர் கள் அனைவரும் கூடினார்கள் கூடிய நகரம் சென்னை; கூடிய இடம் பச்சையப்பன் கல்லூரி,

வரலாறு கூடிய நாள் 1939, மார்ச் 31. தலைமை வகித்தவர் மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதய்யர். வந்திருந்த புலவர்கள் 530-க்கு மேற்பட் டவர்கள். பேசியவர் 11 பேர் 10 பேர் பேசியும் கூட எவரும் சரி என்று ஒப்பவில்லை. பதினொன்றாவதாகப் பேசியவருடைய பேச்சுதான் வள்ளுவருடைய உண்மை யான வரலாறாக இருக்கவேண்டுமென்று கூட்டத்தினர் ஒப்பினர் கூட்டத்தினர் என்ன? தலைமை வகித்திருந்த உ.வே. சாமிநாதய்யர் அவர்களே எழுந்திருந்து இது தான் சரி' என்று பேசியவரை நெஞ்சோடு நெஞ்சம் இறுகக் தழுவிக் கட்டிக்கொண்டு மக்களுக்கு அறிவித்தார் அப்புறம் வசிஷ்டரே இராஜரிஷி என்று ஒப்புக்கொண்ட பிறகு உங்களுக்கும் நமக்கும் அதிலே கருத்து வேறுபாடு எதுவும் இருக்க முடியுமா? ஒப்பவேண்டியதுதான். அப்படிப் பேசிய பெருமகன் பசுமலைப் பேராசிரியர் சோமசுந்தர பாரதி அந்தப் பேச்சினை, உடனேமதுரைத் தமிழ்ச் சங்கத்தார் குறித்துக் கொண்டு, மதுரைக்குச்