பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 15

போதும் திருவள்ளுவருக்கு இன்னும் வள்ளுவர் யார்? ஒன்று உண்டு. திருவள்ளுவரைப் பற்றிச் சொல்வதற்கு, திருவள்ளுவர் பிறந்திராவிட்டால் தமிழன் என்று ஒரு இனம் உண்டு என்று உலக மக்கள் அறியார்கள். திருக்குறள் என்று ஒரு நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொ ழி என்று ஒரு மொழியுண்டு என்று உலக மொழியாளர் அறியார்கள். திருக்குறளும் திருவள்ளுவரும் தோன்றியிராவிட்டால், தமிழ்நாடு என்று ஒரு நாடு உண்டென்று உலக நாட்டார் அறியார்கள் என்று சொல்லி முடித்துவிடலாம்.

திருவள்ளுவரை உங்களுக்குக் காட்டுவதற்கு ஒரு கருவியுண்டு. அதாவது 'அறிவில்லாதவன், அறிவில்லாத வன்' என்று பலர் சொல்லுகிறார்களே, நீங்களும் கேட் கிறீர்களே அதை இனி நீங்கள் ஒப்பக்கூடாது, ஏனென் றால், என் ஆராய்ச்சியிலே அறிவு எது அறிவு? இல்லாதவன் என்று ஒருவனை நான் பார்த்ததேயில்லை. எல்லோருக்குமே அறிவு இருக்கிறது. அதற்கு ஒர் உவமை வேண்டுமென் றால், ஒவ்வொருவர் மண்டையிலும் மூளை இருக்கிறதே! அதைத் தலம் போன்ற பட்டைபோடாத மாணிக்கக்கல் என்று நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். எவன் எவன் எந்தெந்தத் துறையில் தீட்டுகிறானோ அந்தந்தத் துறை யிலே ஒ வரி வீ சு ம். ஒருவன் வியாபாரத் துறை! யிலே தீட்டினால் அந்தப் பக்கம் அவன் ஒளி வீசுவான். ஒருவன் விவசாயத் துறையில் தீட்டினால் அந்தப் பக்கம் அவன் ஒளி வீசுவான். மற்றொருவன் கைத் தொழிலிலே தீட்டுவான் இன்னொருவன் ஆலைத் தொழிலிலே திட்டு வான். இன்னொருவன் நூல் ஆசிரியனாகத் திட்டிக் கொள்வர்ன். இன்னொருவன், மேடைப் பேச்சாளியாக்த் தீட்டிக் கொள்வான். ஒருவன் வக்கீல் துறையில் தீட்டிக் கொள்வார். ஒருவர் டாக்டர் துறையில் தீட்டிக் கொள் வார். ஒருவர் விஞ்ஞானியாகத் தீட்டிக் கொள்வார். எந் தெந்தப் பக்கம் எவரெவர் தீட்டுகிறார்களோ அந்தந்தப்