பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 வள்ளுவரும் குறளும்

பக்கம் அவரவர் அறிவு ஒளி வீசும். அவ்வளவுதான். இதிலே யார் அறிவுள்ளவர்கள்? யார் அறிவில்லா தவர்கள்?

எங்களுரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் சர். ஆர்தர் ஹோப் வந்திருந்தார். நாங்கள் போர்ப் பிரச் சாரம் செய்துகொண்டிருந்தோம் கலெக்டரும் நானும் பின்னாலே காரில்போனோம். கவர்னர் முதல் வண்டியிலே போனார். 18-வது மைலிலே கவர்

ஒரு நிகழ்ச்சி னரின் கார் நின்றுபோய் விட்டது. கலெக்டருக்குப் பீதி, பயந்து விட்டார். அவர் கார் பழுதாகிவிட்டதோ என்னவோ என்று இறங்கினார். கவர்னரும் இறங்கிவிட்டார். நாங் களும் இறங்கினோம். இறங்கினவுடனே அவர் என்ன செய்தார்? ஏதோ ஒன்றினை உற்று நோக்கிக் கொண்டி ருந்தார். அதைக் கண்ணுற்ற நான் கவர்னர் எதை உற்று நோக்குகிறார்?' எனறு கலெக்டரைக் கேட்டேன். அவர் சாலையில் காரை விட்டிறங்கி, அருகிலுள்ள சோளத் தோட்டத்திலே ஒரு குயவன் சக்கரத்தைக் சுற்றி விட்டுக் கொண்டு மண்ணைப் பிசைந்து கலயம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். சற்று நேரம் அதைப் பார்த்தபின் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு மேலே பார்த்தார். கலெக்டர் விழிக்கிறார். நான் மெதுவாகச் சொன்னேன். சக்கரம் சுற்றுகிறதே, மின்சாரம் எங் கிருந்து வருகிறது. மரம் கம்பி காணோமே என்று மேலே பார்க்கிறார்' என்றேன். என்னடா! ஒரு சுற்றுச் சுற்று கிறான். முந்நூறு நானூறு சுற்றுகள் சுற்றுகின்றன. மின் ஆற்றல் ஒன்றையும் காணோம். மண்ணைப் பிசைந்து வைக்கிறான். இப்படியும் அப்படியும் கைகளை மாற்று கிறான். கூஜாவாகிறது. மறுபடி அழுத்துகிறான், மேலே விரிகிறது. நகத்தை வைக்கிறான், கோடு விழுகிறது. என்ன பெரிய வேலையாக இருக்கிறதே! என்று கவர்னர்