பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 27

பிள்ளை ஐந்து வயதுப் பெண். 30 குறட்பாக்களை மனப் பாடம் பண்ணியிருக்கிறது. இந்தப் பொங்கல் விழாவிலே நகரம் முழுவதும் சுற்றிப்பேசி பத்துப் பன்னிரண்டு திருக்குறளைப் பரிசு வாங்கிவந்து வீட்டிலே குவித்திருக் கிறது. ஐந்து வயதுப் பெண் இன்னும் முதல் வகுப்பு முடியவில்லை. அரையாண்டுத் தேர்வுதான் எழுதியிருக் கிறது. 30 குறள் பாடம் பண்ணியிருக்கிறது. தெளி வாகப் பேசுகிறது. பச்சைக் குழந்தைகளெல்லாம் அதைப் பாடம் பண்ணும்பொழுது, நாமெல்லாம், 40 வயது 50 வயது ஆளெல்லாம். அதைக் கொஞ்சம் கடினம் என்று நினைத்துக்கொண்டிருந்தால், நம்முடைய கருத்துத் தவறானது என்றே கொள்ளவேண்டும்.

நீங்கள் எளிதிற் பார்க்கலாம். படிக்கலாம், மனப் பாடம் பண்ணலாம். ஆனால், ஒன்று அதைப் படித்து நீங்கள் புலவனாகவேண்டும் என்று நீங்கள் எண்ணிப் படிக்கிறதாகவிருந்தால் நான் புலவனாகலாம் ஒப்புக்கொள்ள மாட்டேன் அது உங் களுக்கு வேண்டியதில்லை. புலவனாக ஆகலாம் என்றும் ஒருவர் சொல்லியிருக்கிறான். ஒருவன் புலவனாக வேண்டுமானால் வேறு நூல்களைப் படிக்க வேண்டியதில்லை. திருக்குறளை மட்டும் படித்தாலே அவன் புலவனாகி விடலாம் என்பது அவரது முடிவு

'ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்தி னோடு பயின்றதன்பின்-போயொருத்தர் வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க விற்றிருக்க லாம்'

-Bத்தத்தனார் என்று பாடினார் அவர். அதற்காக மட்டும் நீங்கள் படிப்பதாயிருந்தால் படிக்க வேண்டாம்.

மனிதன் மனிதத் தன்மையோடு எப்படி இந்த நிலத் திலே வாழ்வது? நண்பர்களிடத்திலே எப்படிப் பழகுவது?