பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வள்ளுவரும் குறளும்

அரசாங்கத்தோடு எப்படி நடந்து எப்படி கொள்வது? பொது மக்களிடத்திலே வாழ்வது? எப்படி நடப்பது? மனைவியை எப்படி நடத்துவது? பிள்ளைகளை எப்படிப் பழக்குவது? நம்முடைய கடமை என்ன? என்றறிந்து நடக்கப் படிக்கிறதாகவிருந்தால் திருக்குறளைப் படியுங் கள். உங்களுடைய வாழ்க்கையில் அதனால் ஒரு ஒளி வீசும், கலங்கரை விளக்கமாக அமைந்து கப்பலுக்கு வழி காட்டுவதுபோல் அது மக்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டும். அவரே ஒரு குறளில் இந்தக் கருத்தைச் சொல்லி யிருக்கிறார்.

சேற்றுநிலம், காலை வைக்கிறான். வழுக்குகிறது. நடந்தால்தான் போய்த் தண்ணிப் பாய்ச்ச முடியும். உழவன் வரப்பிலேகால் வைக்கிறான். வழிகாட்டி வழுக்கி வழுக்கி விடுகிறது. அப்போது ஒரு வயது சென்ற கிழவன் ஒரு தடியைக் கொடுத்து, அடேய். ஊன்றிக்கொண்டு போ' என்றான். தடியை வாங்கிக் கொண்டு ஊன்றினான் நடந்து விட் டான். சேற்று நிலத்திலே வழுக்கி வழுக்கி நடக்கிற வனுக்கு ஊன்றுகோல் துணை செய்வதுபோல வாழ்க் கையிலே வழுக்கி வழுக்கி ந ட க் கி ற ஆணுக் கும் பெண்ணுக்கும். குடும்பம் எப்படி? மாமியார் எப்படி? மாமனார் எப்படி? பொது மக்கள் எப்படி? குடும்பம் நடத்துவது என்று தெரியாத இளைஞர்கள், இளம் கன்னிகைகள், புதிதாக வாழ்க்கைத் துறையிலே புகுந்திருப்பவர்களுக்கு எப்படி வாழ்க்கை நடத்துவ தென்று ஐயப்பாடு வந்தால் ஒழுக்க முள்ளவர்களுடைய வாய்சொல் போதுமானது. சேற்று நிலத்திலே வழுக்கி நடக்கிறவனுக்கு ஊன்றுகோல் துணைசெய்வதுபோல. வாழ்க்கையிலே வழுக்கி நடக்கும் மக்களுக்குப் பெரியோர் 'வாய்ச்சொல்' துணை செய்யுமென்று அவரே சொல்லி யிருக்கிறார்.