பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 29

இது அகச் சான்று

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்'

என்பது குறள்.

உங்களுடைய வாழ்க்கை செம்மைப்பட வேண்டு மானால், வாழ்க்கையிலே வழுக்கலில்லாமல் இருக்க வேண்டுமானால், சேற்று நிலத்திலேயுங் ஊன்றுகோல் கூட நீங்கள் நடக்கவேண்டுமானால், திருக்குறளை ஒரு ஊன்று கோலாக வைத்து நடந்தால், கட்டாயம் உங்கள் வாழ்வில் ஒளி வீசும்! வாழ்க்கை வெற்றி பெறும் அது உண்மை. அதற்காக நீங்கள் படிக்க வேண்டும். அதிலே என்ன இல்லை! எல்லாம் இருக்கிறது. எதைத் தேடினாலும் திருக்குறளில் அகப்படும். ஒரு குறளில் பல கருத்துக்கள். வள்ளுவர் ஒன்றைச் சொல்லுவார். சொல்லாத ஒன்பது அதில் கட்டித் தொங்கும்.

எது இழிவு என்று வள்ளுவர் சொல்லுவதற்கு முன்பு ஒரு புலவன் சொன்னான் எது இழிவு அவன் சொன்னதைச் சொல்லிச் சொன்னால்தான் உங்களுக்குச் சுவைக் கும். எது இழிவு? எது இழிவு? என்று எதை எதையோ இழிவு என எவனெவனோ சொன்னான். பிரித்தானியன் (British) சொன்னான். எங்களுடைய கொடியிலே இருள் பட்டால் இழிவு என்று. செருமானியன் (German) சொன்னான், காலனியில்லாமல் வாழுகிறது. செர்மனிக்கு இழிவு என்று. உருசியாக்காரன் (Russian) சொன்னான். 'உழைக்கிறவன் உழைக்காதவனுக்குக் கீழேயிருந்து வரி செலுத்திக் கொண்டு வாழ்வது மிகவும் இழிவு' என்று. ஜப்பான்காரன் (Japanese) கூறினான்:உலகத்திலே வணி கத்திலும் கைத்தொழிலிலும் சிறந்திருப்பது ஜப்பான்;