பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வள்ளுவரும் குறளும்

அது செய்த பொருளை உலகத்திலே விற்பதற்குச் சந்தை யில்லாமல் இருக்கிறதே? அது உலகத்தாருக்கு இழிவு' என்று சொன்னான்.தனக்கு இழிவு என்று சொல்லவில்லை அவன். உலகத்திலே வணிகத்திலும் கைத்தொழிலிலும் சிறந்த நாடு என்று ஒப்புக்கொள்ளப்பட்ட ஜப்பான், அது செய்த பொருளை உலகத்திலே விற்கக்கூடாதென்று சொன்னானே, அது உலகத்தானுக்கு இழிவு. எங்களுக்கு என்ன?’ என்று கூறிப் போனான் அவன். சீனாக்காரன் (Chinese) நண்டு, நத்தை, பாம்பு முதலியன தின்று, உலகத்திலே இழிவு என்று ஒன்றுமே இல்லை எனக்கூறி, எல்லாம் தின்னத் தொடங்கினான்.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், கொல்லை அள்ளுவதும் சாக்கடை தள்ளுவதும்தான் இழிவு என்று. பழம் தமிழ்ப் புலவனை இரண்டாயிரம் பழந்தமிழன் ஆண்டுகளுக்கு முன்னே சென்று எது இழிவு?’ என்று கேட்டால், ஒன்றுதான் இழிவு என்றான். உழைக்காமல், வாழாமல், பொருள் தேடாமல், தன்னைப்போன்ற ஒரு மனிதனிடம் சென்று கையை நீட்டி, "ஐயா! ஒரு காசு கொடு' என்று கேட்பது இருக்கிறதே அதுதான் இழிவு என்றான். இவனும் மனி தன், அவனும் மனிதன், அவன் உழைப்பான், சேமிப் பான்; தானும் உண்பான், மீத்தும் வைத்திருப்பான்; நமக்குக் கூட அளிப்பதற்கு வைத்திருப்பான் என்று எண்ணிக் கை நீட்டுகிறானே, அப்போதும் கூட இவன் அவனைப்போல உழைக்காமல், முயற்சியை இழந்த விட்டுப் பிச்சைகேட்டு வாழுகிறானே, அதுதான் இழிவு! என்றான். இதைவிட இழிவு இல்லையா? என்றான் ஒருவன். இல்லை இல்லை என்றான். நன்றாய் எண்ணிப் பார் என்றான் எண்ணிப் பார்த்து ಟ್ಲಿ ஒன்று இருக்கிறது என்றான்; அது என்ன? என்று கட்டான். இப்படி மானங்கெட்டுப் பல்லைக் காட்டி, கையை நீட்டி 'ஐயர் காசு' என்று கூறுகிறவனிடம் போய் இல்லை' என்கிறானே, அதுதான் அதைவிட இழிவு (சிரிப்பு).