பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.2 வள்ளுவரும் குறளும்

கிறது? தொட்டி எங்கே இருக்கிறது? போ! எடுத்துத் கொண்டுவந்து ஊற்று! பிச்சை எடுத்து அறம் செய் யாதே! முயற்சிசெய்' என்று கூறுகிறார்

'ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இழிவு.' வள்ளுவர் ஒன்று சொல்வார் சொல்லாதது ஒன்பது சுற்றிக் கட்டித் தொங்கும், இரப்பது ஒன்றில் ஒன்பது நாவிற்கு இழிவு என்றால், அப்புறம் என்னென்ன தொக்கி நிற்கிறது? இரக்க எண்ணுவது மனதிற்கு இழிவுகேட்பது வாய்க்கு இழிவு! நீட்டிப் பெறுவது கைக்கு இழிவு பெற்று உண்பது வாய்க்கு இழிவு! எல்லாம் தொங்கும் அதில் ஒன்றைச் சொல்லி ஒன்பதைச் சொல்லாமற் சொன்னவர் திருவள் ளுவர், இது எவ்வளவு பெரிய சிறப்பு. எண்ணிப் பாருங்கள்

ஒன்றே முக்கால் அடியில் உயர்ந்த ஒழுக்கம்

ஒழுக்கத்தைப் பற்றி அவர், சொல்லி இருப்பது ஒரு குறள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' ஒரே குறள். ஒன்றே முக்கால் அடி. ஏழு சீர். இதிலே எவ்வளவு உயர்ந்த கருத்துக்கள்! இன்னும் ஒன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்று ஒரு புலவர் பாடினார். முன்பு பாடியவர், "கடுகைத் துளைத்தேழ் கடுகில் ஏழ்கடல் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்று பாடினார். என்ன இது? புளுகாகத் தெரிகிறதே! கடுகைத் துளைத்துக் கடலைப் புகுத்தவாவது! அப்படித்தான் நமக்குத் தோன்றுகிறது