பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 33

உண்மையை ஆராய்ந்தால் புலப்பட்டுவிடும். பொருள் களில் எல்லாம் சிறிது கடுகு பாவிலெல்லாம் சிறியது குறள். 32 அடி, 16 அடி 8 அடி, 4 அடிப் பாக்கள் பல. குறள் ஒன்றே முக்கால் அடி; 2அடிகூட இல்லை! மேலே நான்கு சீர், கீழே மூன்று சீர். இதன் உள்ளே இவ்வளவு கருத்துக்களைப் புகுத்தினால், அது ஒரு சிறுபொருளிலே நிறைந்த செய்தியைப் புகுத்துவதாகக் கருத்து. ஏழு கடல் என்பது எது? ஏழு சீர்தான். தனித்தனியாக உள்ள ஏழு சீர்களிலே இவ்வளவு பெரிய செய்திகளைப் புகுத்தி யிருக்கிறாரே அதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட் டார். ஏழு, கடலைப் புகுத்தியதென்று இப்படி ஒன்றே முக்கால் அடியிலே இவ்வளவு கருத்துக்கள்!

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்' இதற்கென்ன பொருள்? ஒழுக்கமாய் வாழவேண்டும் அவ்வளவுதான் தெரியும். சொல்லெல்லாம் எழுத்தெல் லாம் துருவிப் பார்த்தால் அவர் எண் ஒழுக்கத்தைக் னியதெல்லாம் நமக்குப் படம் பிடித் காப்பாற்று துக் காட்டுவது போன்றிருக்கிறது. 'காப்பாற்ற வேண்டிய பொருள் களிலே ஒழுக்கம் ஒன்று' என்று சொல்கிறார். எப்படிக் காப்பாற்றுவது? ஏன் காப்பாற்ற வேண்டும்?' என்று ஒருவன் கேட்கிறான்? பசு மாட்டுக்குப் புல்லைப் போட் -டுக் காப்பாற்று. ஏன் காப்பாற்றவேண்டும்? பால் தரும்; காப்பாற்று. அப்படியா? சரி; மரம் வைத்துக்காப்பாற்று, ஏன் ஐயா காப்பாற்றவேண்டும்? நிழல் தரும். அப்படியா? சரி. ஏதாகிலும் பலன் இருக்கவேண்டும். அவனுக்குப் பலனில்லாமல் அவன் காப்பாற்றமாட்டான். ஒழுக்கத்தைக் காப்பாற்றச் சொல்லுகிறீர்களே, அது ஏதாவது தருமா? ஊம், தரும் என்கிறார். என்ன? விழுப் பம்! விழுப்பமென்றால் சிறப்பு ஒழுக்கம் விழுப்பம்

வ.-3