பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வள்ளுவரும் குறளும்

தரலான்...' சரிசரி. இப்பொழுது பலன் உண்டா? நமக்கு என்ன தெரிகிறது. சிறப்புத்

தருவது ஒழுக்கம் ஒன்றுதான் என்று. தெரிகிறது. இதிலிருந்து பாருங்கள், ஆடை அணிகள் சிறப்புத் தரா பட்டம் பதவிகள் சிறப்புத் 5frт; மோதிரங்கள் வைரங்களெல்லாம் சிறப்புத் தரா; மோட் டார் வாகனங்கள், மாடி வீடுகள். பட்டு ஆடைகளெல் லாம் சிறப்புத்தரா. மந்திரிப் பதவி முதலிய எந்தப் பதவியாயிருந்தாலும் சிறப்புத் தராது என்கிறார் அவர்; ஏதாகிலும் சிறப்புத் தரவேண்டுமானால் அது ஒழுக்கம்' என்று வரம்பு கட்டிச் சொல்லுகிறார்- ஒழுக்கம் விழுப் பம் தரலான்...' வேறு ஒன்றாலும் அதைப் பெற முடியாது. கிடைத்தற்கரிய சிறப்பை நீ பெறவேண்டு மானால் ஒழுக்கத்தைக் காப்பாற்று. அதிலேயும் பலன் இருக்கிறதோ? அப்படியானால் காப்பாற்றுகிறேன். சரி: என்கிறான். காப்பாற்ற வேண்டிய பொருளில் ஒழுக்கம் ஒன்று. அது சிறப்புத் தருவதினாலே காப்பாற்ற வேண் டும் மிகவும் சரி எம்மாதிரிக் காப்பாற்றவேண்டும்? அடுத்த கேள்வி பொருளைக் காப்பாற்றுகிற மாதிரிக் காப்பாற்றட்டுமா? என்றான். போடா போ. பொருள் தோற்றுப்போனால் இன்னும் கொஞ்சம் சம்பாதித்துக் கொள்ளலாமே? சரி, பிள்ளையைக் காப்பாற்றுகிற மாதிரியா? என்றான். ஒரு பிள்ளை இறந்து போனால் இன்னொரு பிள்ளை பெற்றுக் கொள்ளலாமே! மனைவி யைக் காப்பாற்றுகிற மாதிரியா என்றான். ஒரு தாரம் இறந்து போனால் மறுதாரம் கட்டிக்கொள்ளலாமே! வீட்டைக் காப்பாற்றுகிற மாதிரியா? இடிந்து போனால் இன்னொரு வீடு கட்டிக்கொள்ளலாமே? பின்பு எதைக் காப்பாற்றுகிற மாதிரியாக? என்றான். அவனுக்கு ஒர் உவமை சொல்ல வேண்டுமே!

அவனை உட்காரவைத்து உலகமெல்லாம் போய்த் தேடுகிறார். தேடினால் இரண்டே பொருள்-போனால்