பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வள்ளுவரும் குறளும் இன்னும் உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ குறளைப் பார்த்தால் கிடைக்கும் அதில் அதிகாரிகளி டம் எப்படிப் பழகுவது? இப்பொழுது மக்களுக்கு எத்தனை அதிகாரிகளிடம் பழகுகிற வேலை வந்திருக்கிறது. யாரையாகி லும் போய்க் கேளுங்கள். சொல்கிறார்களா? என்று எந்த நாட்டு எந்தமொழிப் பேராசிரியனிடத்திலாவது போய்க் கேளுங்கள், அதிகாரிகளிடம் எப்படிப் பழகவேண்டும்' என்று. எங்கும் வரம்பு கட்டிச் சொல்லப்பட்டிருக்கிறதா? என்று பாருங்கள். இல்லை வள்ளுவரின் குறளைப் புரட்டுங்கள் காட்டுகிறார் அவர். கலெக்டர்களெல்லாம் மக்களிடத்தில் வருவார்கள். பொதுத் தொண்டு என்று பேசுவார்கள். கூட்டத்திலே இருக்கிறவன் அடுத்தநாள் போய்த் தோளில் கையைப் போடுவான். எல்லோரும் ஒன்று என்கிறீர்களே' என்று மந்திரி வருவான்; அங்கே பேசுவார், சுதந்திரம் வந்துவிட்டது, எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள்' என்று கூட்டத்தை விட்டுப்போகும் போது, நீயும் நானும் மன்னர்தானே என்று தோள்களில் கையைப்போட ஆரம்பிக்கிறதா? இப்படியெல்லாம் இல்லாவிடில், எல்லாரும் அடிமை என்று நினைக்கிறதா? எப்படி எண்ணுவது? எப்படிப் பழகுவது? என்று திருக் குறள் ஒன்றுதான் வழிகாட்டுகிறது.

அவர் என்ன சொன்னார் தெரியுமா? உங்களுடைய ஆசிரியர், அல்லது முதலாளி, அல்லது குடும்பப் பெரிய வர்கள். அல்லது அரசாங்க அமைச்சர்கள். அதிகாரிகள் இவர்களிடம் எப்படி பழகுவது என்பதற்கு ஒரு சட்டம்! இதைச் சொல்லுவதற்குச் சும்மா சொன்னால் தெரியா தென்று ஒர் உவமையைத் தேடினார், எங்கேயோ ஒரு கிழவன் குளிர் காய்ந்து கொண்டிருந்தான். அக் காட்சியைக் கொண்டுவந்து நம் முன்னே வைக்கிறார். எப்படி? பார்! ஆமாம் குளிர்காய்கிறான். அந்த மாதிரிப் பழகச் சொன்னால் தெரியவில்லையே! ஏய், நெருங்கு!