பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 37

நெருங்கு இன்னும் கொஞ்சம் நெருங்கியபின் குளிர் காய்கிறேன், என்கிறான். இன்னும் நெருங்கிப் பார்க் கிறான்; டேய் அதிகம் நெருங்காதே. எட்டு என்கிறார். நெருங்க வேண்டாமா, பிறகு எட்டி விலகிப் போகிறான். டேய் போகாதே உனக்கு நெருப்பின் பயன் வேண்டு மானால் கொஞ்சம் நெருங்கு; ஆனால், அதிகமாக நெருங்கிவிடாதே! - -

'அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.'

என்று உவமை காட்டிக் கூறுகிறார். அதிகமாக எட்டிப் போய்விடாதே அதிகமாக நெருங்கிவிடாதே. நிரம்ப எட்டிப் போய்விட்டால் பலனை இழந்துவிடுவாய்; நிரம்ப நெருங்கிவிட்டால் கட்டாயம் சுட்டுவிடும். எச்சரிக்கையாயிரு. இது எவ்வளவு பெரிய கருத்து; நீங்கள் எந்தப் பேராசிரியரிடம் இந்தக் கருத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? இத்தகைய சிறந்த கருத்துக் களை நீங்கள் குறளிலே பார்க்கலாம்.

மக்களிடத்திலே எப்படிப் பழகுகிறது? என்று அதி காரிகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஒரு குறளிலே ஆசிரியர்களிடத்திலே சொல்லியிருக் அதிகாரிக்கு கிறார். மாணாக்கர்களிடத்திலே எப் படிப் பழகுவது? என்று நான் பல கல் லூரிகளுக்குப் போயிருக்கிறேன் மாணவர்களிற் சிலர் கொஞ்சம் ஒழுக்கம் கெட்டு இருப்பார்கள். ஆசிரியரிடத் தில் போய் என்ன ஐயா பையன்களை இப்படி விட்டு விட்டீர்களே' என்று கேட்டால், நான் என்ன பண்ணு கிறது சொல்லிப் பார்க்கலாம், கேட்கலே, அதன் தலை விதி எந்தக் கதியாகிலும் போகுது. நான் என்ன பண்ணு கிறது? இப்படிப் பொறுப்பைக் கைவிட்டுவிடுகிறார்கள் சில ஆசிரியர்கள். இன்னும் சில மாணவர்கள் பள்ளிக்