பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுவரும் குறளும்

கூடத்திற்குப் போனால், அப்பா! வாத்தியார் அடித்து விட்டாரென்று அழுது கொண்டு வருகிறார்கள் இந்த ஆசிரியர்களுக்கு இரண்டு தான் தெரிகிறது ஒன்று பொறுப்பு இல்லாமல் விட்டு விடுகிறது! அல்லது தடிப் பிரம்பு வைத்து அடித்துக் கொண்டிருப்பது! எப்படி ஆசிரியர்கள் நடக்கவேண்டும்? அவர் குறளைப் படித் திருந்தால் தெரிந்திருக்கும் குறளை. முதலில் ஆசிரியர்கள் படிக்க வேண்டும் (சிரிப்பு)

எப்படி மாணாக்கர்களிடத்திலே பழகுவதென்று வள்ளுவர் காட்டுகின்றார். எவனாவது தவறு செய்தால் சும்மா விட்டுவிடாதே கூப்பிடு! கண்டி. காரணம் கேள்! "ஏன் இப்படிச் செய்தாய்?' என்று கேள்! அழுத்தமாய் எழுந்து அவனைத் தொலைத்து விடுவேனென்று பேசு: ஒங்கு கையைப் பலமாக ஓங்கு; ஆனால், அடி விழுவது மட்டும் மெதுவாய் இருக்க வேண்டும் என்கிறார்.

'கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்'

என்ற செய்யுளைப் பாருங்கள் அதிகாரிகளுக்கு மக்களி டத்திலே கண்டிப்பு சொல்லளவிலே அதிகமாய் இருக்க வேண்டும் ஆனால், அடிமட்டும் பலமாய் விழக்கூடாது; மெதுவாய் விழவேண்டும் எப்படி?

எதைப் பார்த்தாலும் அவரவர்களுக்கு வேண்டிய வைகளை ஆங்காங்கே சொல்லியிருக்கிறார். நாமெல் லாம் எத்தனை பொருள்களைப் பார்த்து ஏமாந்து விடு கிறோம். ஒரு பெரிய எச்சரிக்கைகொடுக் கிறார் வள்ளுவர். நமக்கு கொடுக்கும். ஒர் எச்சரிக்கை! டேய். அழகாயிருக் எச்சரிக்கை கிறது பளபளப்பாயிருக்கிறது! நன் றாகயிருக்கிறது என்று ஆசைப்பட்டு விடாதே! அபாயம்! கோணலாயிருக்கிறது! கறுப்பாயிருக் கிறது! வளைவாயிருக்கிறது என்று வெறுத்து விடாதே இன்பத்தை இழந்துவிடுவாய் என்று ஒர் எச்சரிக்கை