பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 39

கொடுக்கிறார். இப்படிச் சொன்னால் நமக்கு என்ன விளங்குகிறது? இதற்காக, நமக்கு இரண்டு பொருள் களைக் கொண்டுவந்து உவமையாகக் காட்டுகிறார். ஒரு பொருள் என்ன தெரியுமா? அம்பு இன்னும் ஒரு பொருள் என்ன? யாழ் அம்பைக கொண்டுவந்து காட்டுகிறார். பார்த்தாயா? 1; அடி நீளம். தகதகவென்று தங்கம் மாதிரி மின்னுகிறது. ஒழுங்காயிருக்கிறது. அழகாயிருக் கிறது ஆசைப்பட்டு நெஞ்சிலே வைத்துவிடாதே கொன்று விடும். கோணலாயிருக்கிறது. வளைவாயிருக்கிறது. கறுப்பாயிருக்கிறது என்று வெறுத்து விடாதே யாழின் இசை யின்பத்தை இழந்து விடுவாய் என்று எச்சரிக் கிறார்.

'கனைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன வினைபடு பாலாற் கொளல்'

எவ்வளவு உயர்ந்த கருத்து கண்ணுக்கு அழகாயிருக்கி றது என்ற காரணத்திற்காகக் கொள்ளாதே அது கொலை செய்து விடும் கண்ணுக்கு வெறுப்பாயிருக்கிறதென்று வெறுத்துவிடாதே, இன்பத்தை இழந்துவிடுவாய் என்று காட்ட அவர் கையாண்ட முறையையும், உவமைக்குக் கொண்டுவந்த பொருள்களையும் எண்ணிப் பாருங்கள்' எவ்வளவு உயர்வானவை!

நகை போடுகிறோம். வள்ளுவரிடம் போய் நகை போட்டுக் கொள்ளலாமா? என்று கேளுங்கள். போட்டுக் . கொள்ளுங்கள்!போட்டுக்கொள்ளுங்கள் அணிகலன் எவ்வளவு வேண்டுமானாலும் போட் கொள்ளுங்கள். ஆனால், புதிதாக ஒரு நகை போட்டுக்கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் எல்லாருமே போடவேண்டும் என்கிறார். எங்கே? கண்ணிலே போட வேண்டும் ஐயோ; உறுத்துமே! உறுத்தாது! எதனாலே செய்து போடுகிறது முத் தாலே: முத்து வாங்கப் பணமில்லையே? இது வாங்கப்