பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 43

யிலும் எந்தப் பேராசிரியரும் சொல்லியிராத புதுக்கருத்தைச் சொன்னார் அமெரிக்கப் பேராசிரியர் என்று எழுதியிருந் தான் மொச்சைக் கொட்டை எழுத்து, பலாக் கொட்டை எழுத்திலே! அவன் படம் வேறு போட்டிருந்தான்.அதைப் பார்த்தேன். என் வயிறு பற்றி எரிந்தது என்ன எழுதி யிருந்தான்? அமெரிக்கா தோன்றிய காலம் தொட்டு அமெரிக்க மக்கள் வெற்றியடைந்தவர்களைத்தான் வாழ்த்தியிருக்கிறார்கள். வெற்றியடைந்தவர்களைவிடத் தோல்வியடைந்தவர்கள் மிகப்பெரிய அறிவாளிகள். ஆனால், அப்படிப்பட்ட உயர்ந்த அறிவாளிகளை அமெரிக்க மக்கள் வாழ்த்தத் தவறிவிட்டார்கள்' என் பதுதான். அவன் படத்தைப் பிடித்துப் போட்டுத் தலைப்பிலே அவன் சொன்னதைக் கொட்டை எழுத்திலே வேறே போட்டிருந்தான். நான் பார்த்தேன். தப்பு யாரு டையது? நம்முடையதுதானே?

திருக்குறளை மொழி பெயர்த்து,அரை அணா விலை யில் அமெரிக்க நாட்டிற்கு அனுப்பியிருந்தால், அவன் இந்தக் கருத்தை இரண்டு ரூபாய் விலை போட்டு இங்கே அனுப்பியிருப்பானா?

இதைப் பாருங்கள். வள்ளுவர் சொல்லியிருக்கிறார். கல்வியறிவில்லாத குறக்குடி மக்கள் மலை உச்சியில் வாழு கிறார்களே, அந்த மக்களிடத்தில் இந்தக் கருத்தை ஏற்றிச் சொல்கிறார். வேடர் தலைவன் வயது சென்ற வன், படுத்துவிட்டான் அவனுக்கு பெரிதில் குறி வை இரண்டு மக்கள், அப்பா! போய் வேட்டை ஆடிவிட்டு வாருங்கள்' என்று அனுப்புகிறான்.மூத்த மகன் முயல் வேட்டைக்குப் போக எண்ணி, முயலை எய்யும் அம்பும் வில்லும் கையி லெடுத்து, முயல் வாழும் காட்டுக்குச் சென்று, முயலை யும் கண்டு, குறிபார்த்து எய்து, முயலையும் வீழ்த்தி, அதன் உடலையும் கைப்பற்றி, நீரிலோ புதரிலோ மறைந்து போகாமல்,வழியிலும் பறிகொடுத்து விடாமல்,